"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,788 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:ஆறாம் எட்வர்ட் .jpg|thumb|ஆறாம் எட்வர்ட் ]]
[[படிமம்:மார்டின் லூதர்கிங் .jpg|thumb|மார்டின் லூதர்கிங் ]]
இங்கிலாந்து மன்னர் [[எட்டாம் ஹென்றி]] தொடக்கத்தில் [[மார்டின் லூதர்கிங்]]கிற்கு எதிரான போப்பாண்டவரை ஆதரித்து வந்தார். இதன்காரணமாக, அவர் '''சமயக் காவலர்''' எனப் போப் பத்தாம் லியோவால் போற்றப்பட்டார். இருவருக்குமான இந்த நல்லுறவு அதிக காலம் நீடிக்காமல் முறிந்துபோனது. எட்டாம் ஹென்றி அரசியை மணவிலக்கு செய்துவிட்டு, ஆன்பொலின் என்பவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இத்திருமணத்திற்கு போப் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து, பாராளுமன்றத்தின் உதவியை நாடினார் ஹென்றி. இவரது இந்த நடவடிக்கைக் காரணமாக, இங்கிலாந்து பாராளுமன்றம் [[ஆதிக்கச் சட்டம்]] ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, மன்னர் இங்கிலாந்துத் திருச்சபைக்கும் தலைவர் என்று அறிவிக்கப்பட்டார். போப்பாண்டவரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட இந்த புதிய திருச்சபை '''ஆங்கிலிக்கத் திருச்சபை''' என்றழைக்கப்பட்டது. எட்டாம் ஹென்றி கத்தோலிக்கக் கோட்பாடுகளில் எந்தவித முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆறாம் எட்வர்டு ஆட்சிக் காலத்தில்தான், இத்திருச்சபை புரோட்டஸ்டன்ட் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியது. மேலும், வழிபாட்டு விதிமுறைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன.<ref>{{cite book | title=வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2016 | pages=ப. 177}}</ref>
 
==விளைவுகள்==
சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக கிறித்துவ சமயத்தில் கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டண்டுகள் என்று இரு பிரிவினர் உருவாயினர். இந்த வேறுபாட்டால் சமயப் பாகுபாடுகளும், ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவில் சமயம் சார்ந்த போர்களும் ஏற்பட்டன. விவிலியம் நூலைப் படித்து சமயக் கருத்துகளின் பயன்பாடுகளை மக்கள் உணர்ந்து கொண்டனர். புரொட்டசஸ்டண்டுகள் விவிலிய விளக்கங்களைத் தம் விருப்பம்போல் புரிந்துகொண்டனர். இதனால் சுய சிந்தனை பெருகியது. இதன்காரணமாக, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகள் வளரத் தொடங்கின. திருச்சபையில் மேற்கொள்ளப்பட்ட மக்களாட்சி நடைமுறைகளால் தேசிய, குடியரசு கருத்துகள் பெருகின. அதேசமயம், தங்களுக்கான திருச்சபைகளைப் பல்வேறு நாடுகள் ஏற்படுத்திக்கொண்டன. தேசியத் திருச்சபைகள் போப்பாண்டவரின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. புரோட்டஸ்டன்ட் மற்றும் எதிர்சமய சீர்திருத்த இயக்கம் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, திருச்சபை தூய்மைப்பட்டது. உயரிய ஒழுக்க நெறிகள் பின்பற்றப்பட்டுப் போதிக்கப்பட்டன.<ref>{{cite book | title=வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2016 | pages=ப. 179}}</ref>
 
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2323308" இருந்து மீள்விக்கப்பட்டது