அணு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
No edit summary
வரிசை 2:
'''அணு எண்''' ''(Atomic number)'' என்பது [[வேதியியல்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]], ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] [[உட்கரு]]வில் உள்ள [[புரோட்டான்]]களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதனால் புரோட்டான் எண் என்றும் இதை அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அத்தனிமத்தின் உட்கரு பெற்றுள்ள மின்சுமை எண்ணுக்குச் சமமாகவும் இவ்வெண் கருதப்படுகிறது. மரபுமுறையில் அணுவெண்ணை Z என்ற குறியீட்டால் குறித்தார்கள். அணுவெண்ணானது மூலகம் அல்லது தனிமமொன்றைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது. ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் [[எலக்ட்ரான்]]களின் எண்ணிக்கை அவ்வணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.
 
அணு எண், Z என்பது திணிவெண் A என்பதிலிருந்து வேறுபட்டதாகும். திணிவெண் அல்லது அணு எடை என்பது ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையாகும். அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையை நியூட்ரான் எண் என்ற பொருளில் N என்ற எழுத்தால் குறிப்பர். எனவே A = Z + N என்ற வாய்ப்பாடு அணு எடையைக் குறிக்கப்கணக்கிடப் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:வேதியப் பண்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அணு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது