பயனர்:எஸ்ஸார்/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தலைப்பிடல்
வரிசை 5:
|url = http://www.citypopulation.de/India-TamilNadu.html|title = All towns and agglomerations in Tamil Nadu having more than 20,000 inhabitants.}}</ref>, நகர்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம். [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு முதல் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
== அமைவிடம் ==
இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று<ref>{{cite web
|url = http://india.gov.in/knowindia/culture_heritage.php?id=54|title = India heritage - Meenakshi temple, Madurai}}</ref>. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை [[தமிழ் மொழி|தமிழ்]] மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. [[சங்க காலம்]] என குறிக்கப்படும் கிமு.3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களை கொண்டு மூன்றாம் தமிழ் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.
 
== பிற பெயர்கள் ==
மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும்.
 
மௌரிய பேரரசின் அமைச்சர் கவுடில்யர் (கிமு 370 - கிமு 283) மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ்(350 கிமு - 290 கிமு) ஆகியோரின் குறிப்புகளுடன் துவங்குகிறது மதுரையின் எழுதப்பட்ட வரலாறு. புராதான சின்னமாக பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. [[சங்ககாலப் பாண்டியர்]], [[இடைக்காலச் சோழர்கள்|இடைக்கால சோழர்கள்]], [[சாளுக்கிய சோழர்கள்|பிற்கால சோழர்கள்]], [[பிற்காலப் பாண்டி நாடு|பிற்காலப் பாண்டியர்கள்]], [[மதுரை சுல்தானகம்]], [[விஜயநகரப் பேரரசு]], [[மதுரை நாயக்கர்கள்]], [[சந்தா சாகிப்]], கர்நாடக ராச்சியம் மற்றும் [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்கள்]] போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
 
== சிறப்புமிக்க இடங்கள் ==
நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில், [[திருமலை நாயக்கர் அரண்மனை]] போன்றவை அவற்றில் புகழ்பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. [[சித்திரைத் திருவிழா|சித்திரை திருவிழா]] என்று பொதுவாக அழைக்கப்படும் [[சித்திரைத் திருவிழா|மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்]] ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து லட்சம் மக்களால் கண்டுகளிக்கப்படும் சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக [[சித்திரைத் திருவிழா|கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்]] நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான [[அவனியாபுரம்]] பகுதியில் [[பொங்கல் (திருநாள்)|பொங்கல் திருநாளை]] முன்னிட்டு நடைபெறும் [[ஏறுதழுவல்]] மற்றும் நகரின் அருகே உள்ள [[அலங்காநல்லூர்]] [[பாலமேடு]] பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் மாநில அளவில் பெயர்பெற்ற நிகழுவுகள்.
 
== தொழில்கள் ==
தென்தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மற்றும் கல்வி மையமாக மதுரை திகழ்கிறது. ரப்பர், ரசாயனம், கிரனைட் போன்ற உற்பத்தி தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன<ref>{{cite web
|url = http://www.hindu.com/2007/10/25/stories/2007102550550200.htm|title = An industry that can bolster the economy of Madurai.}}</ref>. தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாக பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு மற்றும் உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. [[மதுரை மருத்துவக் கல்லூரி|மதுரை மருத்துவக்கல்லூரி]], [[மதுரை சட்டக் கல்லூரி]] போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது.
 
== மக்கட்தொகை ==
2011 ஆம் ஆண்டு இந்தியா மக்கட்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட தகவலின் படி மதுரை நகரில் 1,016,885 பேர் வசிக்கின்றனர்<ref>{{cite web|title=Cities having population 1 lakh and above|url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|format=PDF|publisher=censusindia|publisher=The Registrar General & Census Commissioner, India|accessdate=17 October 2011|ref={{sfnRef|Cities having population 1 lakh and above|2011}}}}</ref>. மதுரையில் பன்னாட்டு சேவைகள் வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:எஸ்ஸார்/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது