மின்தூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 94:
 
அயக்காந்த அகணியுடனான மின்தூண்டிகள், அகணியில் உருவாகும் பின்னிடைவு மற்றும் சுழிப்போட்டம் என்பன காரணமாக மேலதிக சக்தி விரயத்தைக் கொண்டிருக்கும். இவ் விளைவு மீடிறனுடன் அதிகரிக்கும். உயர் மின்னோட்டங்களில், அகணியில் காந்த நிரம்பல் ஏற்படுவதனால் உருவாகும் ஒருபடியல்லாத்தன்மை காரணமாக, மின்தூண்டியின் இலட்சிய நடத்தை மாறுபடும். மின்தூண்டியானது, அதன் அருகிலுள்ள வெளி அல்லது மின்சுற்றுக்கு மின்காந்த சக்தியை கதிர்ப்பதன் மூலமோ அல்லது, ஏனைய சுற்றுக்களிலிருந்து வரும் மின்காந்தக் கதிர்ப்பை உறிஞ்சுவதன் மூலமோ மின்காந்தத் தலையீட்டை உருவாக்கும். ஆகவே, பிரயோகப் பயன்பாடுகளில் இக்காரணிகள் முக்கியத்துவமிக்கதாக விளங்கும்.
 
==பயன்பாடுகள்==
[[File:InductorSignalFilter1.png|150px|thumb|சமிக்ஞை வடிகட்டலின் எடுத்துக்காட்டு. இக்கட்டமைப்பில், மின்தூண்டியானது ஆடலோட்ட மின்னோட்டத்தை தடுத்து, நேரோட்டத்தை மட்டும் தன்னூடு செல்லவிடும்.]]
[[File:InductorSignalFilter2.png|150px|thumb|சமிக்ஞைப் வடிகட்டலின் எடுத்துக்காட்டு. இக்கட்டமைப்பில், மின்தூண்டியானது நேரோட்ட மின்னோட்டத்தை தடுத்து, ஆடலோட்டத்தை மட்டும் தன்னூடு செல்லவிடும்.]]
[[Image:Drosselspule im Umspannwerk Bisamberg.jpg|thumb|ஆசுதிரேலிய மின் உப நிலையத்திலுள்ள 50 MVAR கொள்ளளவுடைய மூவவத்தை இரும்பு அகணி கொண்ட மின்தூண்டி]]
[[Image:Ferrite bead no shell.jpg|thumb|கணனி வலு வடத்தில் காணப்படும் மெல்லிரும்பிலாலான வடிகட்டி. இது இலத்திரனியல் இரைச்சலை வடிகட்ட உதவும்.]]
மின்தூண்டிகள் தொடர்குறிமுறை சுற்றுக்களிலும் சமிக்ஞைச் செயன்முறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மின்தூண்டிகள் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நேரோட்ட மின்னோட்ட மின் வழங்கிகளில் ஊசலாட்டத்தை அகற்றுவதற்கு கொள்ளளவிகளுடன் பயன்படும் பெரிய மின்தூண்டிகளிலிருந்து, கம்பி வடங்களில் வானொலி மீடிறன் இடையீட்டை அகற்றுவதற்காக அதனைச்சுற்றி காணப்படும் மெல்லிரும்புக் குமிழில் பயன்படும் சிறிய மின்தூண்டிகள் வரை இவை வேறுபடுகின்றன. நேரோட்ட வழங்கிகளாகப் பயன்படும் தொடர்மாற்றி மின் வழங்கிகளில் சக்திச் சேமிப்புக் கருவியாக மின்தூண்டி பயன்படுத்தப்படுகிறது. ஆளி தொடர்பறுக்கப்படும் காலப்பகுதியில் மின்னோட்டத்தைத் தொடர்ந்து பேணும் வகையில் மின்சுற்றுக்கு மின்தூண்டி சக்தியை வழங்கும்.
 
கொள்ளளவியொன்றுக்குத் தொடுக்கப்படும் மின்தூண்டியானது ஒரு இசைவாக்கல் சுற்றை உருவாக்கும். இது அலைவு மின்னோட்டத்துக்கான பரிவுச் சுற்றாகப் பயன்படும். இசைவாக்கிச் சுற்றுக்கள் வானொலி அலை உபகரணங்களான வானொலி அலைபரப்பிகள் மற்றும் அலைவாங்கிகளில் கூட்டுச் சமிக்ஞையிலிருந்து குறித்த ஒரு மீடிறனுடைய சமிக்ஞையை மட்டும் தெரிவுசெய்யும் செயன்முறையில் குறுகிய பட்டை அனுமதிப்பு வடிகட்டியாகவும், இலத்திரனியல் அலை இயற்றிகளில் சைன் சமிக்ஞைகளை உருவாக்குவதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
காந்தப்புலத்தினால் இணைக்கப்பட்டு அருகருகே அமைந்திருக்கும் இரு மின்தூண்டிகள் மின்மாற்றியொன்றை உருவாக்கும். மின்மாற்றியானது ஒவ்வொரு மின் வலு நிலையத்திலும் காணப்படும் அடிப்படைச் சாதனமாகும். மீடிறன் அதிகரிக்கையில் அகணியில் உருவாகும் சுழிப்போட்டம் மற்றும் சுருளில் ஏற்படும் தோல் விளைவு என்பன காரணமாக மின்மாற்றியின் பயன்திறன் குறைவடையலாம். உயர் மீடிறன்களில் அகணியின் அளவு குறைக்கப்படலாம். இக்காரணம் பற்றி, விமானங்கள் ஆடலோட்ட மின்னோட்டத்தில் வழமையாகப் பயன்படுத்தப்படும் 50 அல்லது 60 Hz மீடிறனுக்கு மாறாக 400 Hzஐப் பயன்படுத்துகின்றன. இதன்மூலம் மின்மாற்றிகளின் அளவு பெருமளவில் குறைவதனால் மின்மாற்றியின் நிறையும் குறைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.wonderquest.com/expounding-aircraft-electrical-systems.htm |title=Aircraft electrical systems |publisher=Wonderquest.com |accessdate=2010-09-24}}</ref>
 
மின் கடத்து முறைமைகளில் மாறு மின்னோட்டம் மற்றும் வழு மின்னோட்டங்களைக் குறைப்பதற்காக மின்தூண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, மின்தூண்டிகள் பொதுவாக மாறுமின்னெதிர்ப்பி என அழைக்கப்படுகின்றன.
 
மின்தூண்டிகளில் பக்கவிளைவுகள் அதிகம் காணப்படுவதால் அவை இலட்சிய நடத்தையிலிருந்து மாறுபடுவதாலும், மின்காந்தத் தலையீட்டை உருவாக்குவதாலும், மின்தூண்டிகளின் பௌதிக அளவு காரணமாக அவற்றை ஒருங்கிணை சுற்றுக்களில் பயன்படுத்த முடியாமையினாலும் நவீன இலத்திரனியல் சாதனங்களில், குறிப்பாக கையடக்கக் கருவிகளில் மின்தூண்டிகளின் பயன்பாடு வீழ்ச்சியடைந்து வருகிறது. மின்தூண்டிகளுக்குப் பதிலாக, கொள்ளளவிகளிலிருந்து மின்தூண்டத்தைப் பெறத்தக்க சுழலி போன்ற செயல்நிலைக் கருவிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்தூண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது