இரும்புக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
வரிசை 110:
 
கொரியாவின் மஞ்சள் கடல் பகுதியில் இரும்புக்காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டிலும், ஜப்பானில் யாயோய் ஆட்சிக்காலத்தின் போதும் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) இரும்புக்காலம் ஆரம்பமானது.
 
==இரும்புக் காலத்தில் தமிழகம்==
தமிழ்நாட்டில் ஏனைய நாடுகளைப்போல் புதிய கற்காலத்திற்குப் பிறகு, செம்புக்காலம் அல்லது வெண்கலக் காலம் உருவாகவில்லை. மாறாக, இரும்புக் காலமே தோன்றியதென்பது புவியியலாளர்களின் கருத்தாக உள்ளது. புதிய கற்காலத்தில், மட்பாண்டங்கள் செய்வதற்காக மக்கள் மண்ணைத் தோண்டி, அவற்றில் உருவாக்கிய மட்பாண்டங்களைச் சூளையில் சுட்டபோது தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்தாகவும் சொல்லப்படுகிறது. இரும்புக் காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் தவிர, சென்னைக்கு அருகிலுள்ள பெரம்பூர், கோயம்புத்தூர் மாவட்டம், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள தலைச்சேரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆதிச்சநல்லூரில் மனித உடம்பின் முழு எலும்புக்கூடுகள், நேர்த்தியும் வழவழப்பும் மிக்க மட்பாண்டங்கள், பொன் அணிகலன்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு ஆயுதங்கள், சிறிய வேல்கள், அரிசி, உமி முதலான பொருட்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இரும்புக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது