இரும்புக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 113:
==இரும்புக் காலத்தில் தமிழகம்==
தமிழ்நாட்டில் ஏனைய நாடுகளைப்போல் புதிய கற்காலத்திற்குப் பிறகு, செம்புக்காலம் அல்லது வெண்கலக் காலம் உருவாகவில்லை. மாறாக, இரும்புக் காலமே தோன்றியதென்பது புவியியலாளர்களின் கருத்தாக உள்ளது. புதிய கற்காலத்தில், மட்பாண்டங்கள் செய்வதற்காக மக்கள் மண்ணைத் தோண்டி, அவற்றில் உருவாக்கிய மட்பாண்டங்களைச் சூளையில் சுட்டபோது தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்தாகவும் சொல்லப்படுகிறது. இரும்புக் காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் தவிர, சென்னைக்கு அருகிலுள்ள பெரம்பூர், கோயம்புத்தூர் மாவட்டம், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள தலைச்சேரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆதிச்சநல்லூரில் மனித உடம்பின் முழு எலும்புக்கூடுகள், நேர்த்தியும் வழவழப்பும் மிக்க மட்பாண்டங்கள், பொன் அணிகலன்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு ஆயுதங்கள், சிறிய வேல்கள், அரிசி, உமி முதலான பொருட்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.<ref>{{cite book | title=தமிழ்நாட்டு வரலாறு | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை-98. | author=அ. இராமசாமி | year=2010 | pages=ப. 17 | isbn=978- 81- 234- 1631- 8}}</ref>
இரும்புக்காலத்தில் இறந்தவர்களுக்கு ஈம அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய ஈம அடையாளங்கள் பெருங்கற்படைச் சின்னங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆனால், பெருங்கற்படைச் சின்னங்கள், இரும்புக் காலத்திற்குப் பிறகு வரலாற்றுத் தொட்க்கக் காலத்திலும் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரும்புக்கால ஈம அடையாளங்கள் வரலாற்றுத் தொடக்கக் கால ஈமச் சின்னங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. '''கொடுமணல்''' ஒரு வரலாற்றுத் தொடக்கக்கால ஈம அடையாள இடமாகும். வரலாற்றுத் தொடக்கக் கால ஈம அடையாளங்களில் உரோமானிய அல்லது பிற இந்திய நாணயங்களும், இரசக் கலவை பூசப்பட்டு ஓவியம் வரையப்பட்ட பானை வகைகளும் காணப்படுகின்றன.<ref name="http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/irumbu_kalam.htm">{{cite web | url=http://www.tamilvu.org/ | title=இரும்புக்காலம் | accessdate=29 சூன் 2017}}</ref>
மக்கள் நிலையான வாழ்க்கையைத் தொடக்கி, வேளாண் தொழிலை மேற்கொண்ட பின்னரே பெரும் கற்புதைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். மலைச் சரிவுகளிலும் மேட்டு நிலங்களிலும் காணப்படும் புதைகுழிகள் மனித உடலை வைப்பதற்காக மட்டுமின்றி இறந்தவர்களின் ஈம அடையாளமாக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இக்காலத்து மக்கள் கற்கருவிகளைக் கைவிட்டு இரும்புக் கருவிகளைக் கையாண்டிருந்தனர்.<ref>{{cite book | title=தமிழ்நாட்டு வரலாறு | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை-98. | author=அ. இராமசாமி | year=2010 | pages=ப. 19 | isbn=978- 81- 234- 1631- 8}}</ref>
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இரும்புக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது