நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் ''Oryza rufipogan'' ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் ''Oryza sativa'' var. ''indica'' வும், சீனப்பகுதியில் ''Oryza sativa'' var. ''japonica'' வும் தோன்றின.
 
இந்தியாவில், அவ்வையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகலும் உள்ளன. சீனாவில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.
 
ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவா வில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது