காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== காம நாயக்கன்பட்டி புனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:28, 30 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

காம நாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம்

புனித பரலோக மாதா திருத்தலம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டடத்தில் காம நாயக்கன்பட்டி புதுமை நகரில் உள்ள இந்தியாவின் புகழ் பெற்ற கத்தோலிக்கத் திருத்தலமாகும்.

 
பரலோக மாதா
              இத்திருத்தலம் கி.பி 1684 ல் பங்குத்தந்தை சான் டி பிரிட்டோ அவர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி 1850ல் விரிவுபடுத்தப்பட்டது.இந்த ஆலயம் புனித பரலோக மாதாவின் பெயரால் கட்டப்பட்டதாகும்.

வீரமாமுனிவர் வருகை

    இத்தாலி நாட்டுக் கவிஞரும், தேம்பாவணி இயற்றிய வீரமாமுனிவர் இத் திருத்தலத்தில் பங்குத்ததந்தையாக l712 -1715 வரை பணியாற்றினார் என்பது  குறிப்பிடத்தக்கது. இவரின் இயற் பெயர் கான்ச்டான்டின் சோசப் பெக்சின் என்பதாகும். இவருக்கு தைரியநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்திய கலாச்சாரப்படி இத்தலத்தில் விழாக் காலத்தில் பரலோகமாதா தேர் பவனி வருவதை இவர் அறிமுகப்படுத்தினார். வீரமாமுனிவர் காலத்தில் இந்த தலத்தில் இரண்டு மரத்தால் ஆன தேர்கள் செய்யப்பட்டன.

புனித பரலோக மாதா திருவிழா

  புனித பரலோக மாதா ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் நடைபெறும். பத்து நாட்கள் இத்திருவிழா நடைபெறும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும். திருவிழாவின் போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறித்தவ கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளை பெற்றுச் செல்வர். விழாவின் போது மக்கள் கும்பிடு சேவை  என்னும் வேண்டுதலை நிறைவேற்றுவது சிறப்பானதாகும். இதன் மூலம் தங்கள் வேண்டுதல் முழுமையடைவதாக மக்கள் நம்புகின்றறனர்.

REF: Kamanayakkanpatti-wikipedia

    www.palayamkottai diocese.org