பயனர்:TNSEjesiTUT/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 20:
தருவை என்ற ஊரை அடுத்துள்ள பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனின் காலில் ஏதோ ஒன்று இடற அதை அவன் ஊர் மக்களிடம் தெரிவித்தான். ஊர் மக்கள் திரண்டு வந்து அம்மணல் மூடிய பகுதியை தோண்டிய போது புதையுண்ட சிற்றாலயத்தைக் கண்டனர். இந்த அகழாய்வுப் பணி 1700 - 1750 க்கு இடையே நிகழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. தோண்டி எடுக்கப்பட்ட ஆலயத்திற்குள் பீடத்தின் நடுவே மாதா சொரூபத்தின் இரு பக்கங்களிலும் மெழுகு திரிகள் அணையாது
எரிந்து கொண்டிருந்தது. ஆலயத்தில் இஞ்ஞாசியார், அந்தோனியார் சொரூபங்கள் இருந்ததால் இதை இயேசு சபை குருக்கள் கட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
இலக்கியங்களில் தாய் தெய்வ வழிபாடு
பழந்தமிழ் இலக்கியத்தில் தாய் தெய்வ வழிபாட்டைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்திலும் மணிமேகலை, சிலப்பதிகாரத்திலும் இவை பற்றிய முக்கியக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழர்களின் தாய் தெய்வம் கொற்றவை என்பதும் இந்திய - ஆரிய கலப்பால் தோன்றிய தாய் தெய்வமான காளி பற்றிய செய்திகளையும் இலக்கியத்தில் காணலாம்.கன்னியாகுமரியில் இருந்த குமரி தெய்வத்தையே மணிமேகலை காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் சம்பாபதி என்று வணங்கினர்.'கண்ணகி காளியின் அம்சமாக வும் தாய் தெய்வமாகவும் மாறியது போல மணிமேகலையும் கடல் கெழு செல்வியாக மாறி தாய் தெய்வமானதை அறியலாம். சங்க இலக்கியங்கள் தாய்த் தெய்வத்தை காட்டில் உறைபவளாகவே கூறுகிறது கானமர்செல்வி அருளலின் என்கிறது அகப் பாடல். காட்டில் வாழும் தாய் தெய்வத்தைப் பற்றி மணிமேகலை /கலித்தொகை முதலிய பிற்கால நூல்களும் கூறியுள்ளன. வலை வலந் தன்னமென்னிழன் எனத் தொடங்கும் பொருநராற்றுப் படை 41 - 42 குறிப்பிடுகிறது.
கொல்லிப்பாவை கொல்லிமலையில் தோன்றிய புகழ் பெற்ற தாய் தெய்வமென்று தெரிகிறது.தமிழ்நாட்டில்
வழங்கிய மற்றொரு தாய் தெய்வம் கேட்டை.
எட்டாம் நூற்றாண்டில் கேட்டைக்கு
தனிக்கோவிலும் இருந்தது. சேந்தன் திவாகரம் இந்த தெய்வத்தை முகடி, தவ்வை என அழைக்கிறது.சங்க காலத்திலேயே திரு என்ற இலட்சுமியும கஜலட்சுமியும் வழக்கில் இருந்தன.மணிமேகலையில் வரும் சண்டிகையும் வடநாட்டில் பரவலாக தொழப்படும் தாய் தெய்வமாகும். மதுரையின் ஆதித்தாய் தெய்வம் மீனாட்சி என்பதை அறிய வேண்டும்.
Ref: மணிமேகலை, உ.வே.சா. பதிப்பு.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSEjesiTUT/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது