சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7,714 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
வரிசை 78:
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியினைச் சமவுடைமைச் சமூகம் போதிய அளவு அங்கீகரிக்கப்படவில்லை. தேசிய விடுதலை இனங்கள் பற்றிய லெனினது பார்வை புறந்தள்ளப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான பனிப்போரில் சோவியத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமே விடுதலை பெற்ற நாடுகளின் தலையாயப் பணியாக அமைந்தது. மூன்றாம் உலக நாடுகள் சமவுடைமையின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும், மூன்றாம் உலக நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை அவற்றிற்குரிய தனித்த பண்புகளுடன் பேச உலக கம்யூனிச இயக்கம் முன்வரவில்லை.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/11/20/%3Ffn%3Dw1611201%26p%3D1&ved=0ahUKEwiuiYra-uXUAhVMLo8KHZrVAfIQFghFMAk&usg=AFQjCNEwNlS-nRfaTjIn1MGSwPcqSXRVIQ">{{cite web | url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/11/20/?fn=w1611201&p=1 | title=சோசலிச பாதையில் 100 ஆண்டு பயணம் | accessdate=30 சூன் 2017}}</ref>
 
மூன்றாம் உலக நாடுகளில் தெற்கு ஆசியத் துணைக்கண்டத்தின் இன்றியமையாத சமூக வடிவமாக சாதி அமைப்பு உள்ளது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசியல், பண்பாடு, சமயம், பொதுவாழ்வு, மறைமுக வாழ்வியல் என அனைத்திலும் சாதியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது.சாதிக்கு, வலுவான, வரலாற்றுரீதியான தொடர்பு இருப்பது வெளிப்படை. தெற்கு ஆசியாவின் எல்லா பகுதிகளிலும் சாதி காணப்படுகிறது.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=20&cad=rja&uact=8&ved=0ahUKEwjrr8fBgObUAhVGqI8KHQWgCdoQFgieATAT&url=http%3A%2F%2Fwww.socialsciencecollective.org%2Ftag%2F%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%2595-%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2F&usg=AFQjCNF0iS8ntRI54P7eDp5swfhfrbbbkQ">{{cite web | url=http://www.socialsciencecollective.org/ | title=மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரிகள் தேங்கிப் போனது ஏன்? | accessdate=30 சூன் 2017}}</ref>
மார்க்சிய வர்க்கப் போராட்டத்திற்கு அதிகம் பொருந்தக்கூடிய நாடு இந்தியா என்பார் அம்பேத்கர். சரியான திசையில் பயணித்தால், ரஷ்யாவைவிட எளிதாக இந்தியாவில் ஒரு புரட்சியை நிகழ்த்திவிட முடியும் என்று எடுத்துரைத்தார். இவர், சாதி என்ற சொல்லுக்குப் பதிலாகப் பல இடங்களில் '''வர்க்கம்''' என்பதைத் தம் எழுத்துக்களில் அவர் பயன்படுத்தியுள்ளார். இவர், ''பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்'' என்னும் நூலில் சாதிக்கு எதிராகப் பௌத்தம் நடத்திய போராட்டங்களையும் அவற்றை முறியடித்து சாதி அமைப்பு நிறுவப்பட்ட வரலாற்றையும் பதிவுசெய்துள்ளார்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=20&cad=rja&uact=8&ved=0ahUKEwjrr8fBgObUAhVGqI8KHQWgCdoQFgieATAT&url=http%3A%2F%2Fwww.socialsciencecollective.org%2Ftag%2F%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%2595-%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2F&usg=AFQjCNF0iS8ntRI54P7eDp5swfhfrbbbkQ">{{cite web | url=http://www.socialsciencecollective.org/ | title=மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரிகள் தேங்கிப் போனது ஏன்? | accessdate=30 சூன் 2017}}</ref>
இந்தியாவிற்கு, சமவுடைமை அரசே பொருத்தமாக இருக்கும் என்கிறார். இதற்குப் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் முதலானவற்றை அரசுடமைப்படுத்துவது இன்றியமையாததென அவர் எடுத்துரைத்துள்ளார். சமவுடைமைக் கொள்கைக்கு மார்க்சுக்கு இணையாக கௌதம புத்தரை முன்மொழிந்து, அவர் தனது உரையாடல்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=20&cad=rja&uact=8&ved=0ahUKEwjrr8fBgObUAhVGqI8KHQWgCdoQFgieATAT&url=http%3A%2F%2Fwww.socialsciencecollective.org%2Ftag%2F%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%2595-%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2F&usg=AFQjCNF0iS8ntRI54P7eDp5swfhfrbbbkQ">{{cite web | url=http://www.socialsciencecollective.org/ | title=மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரிகள் தேங்கிப் போனது ஏன்? | accessdate=30 சூன் 2017}}</ref>
அதுபோல், ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள்தாம் உலகஅளவில் மிக அடர்த்தியான பண்பாட்டுப் பரப்பைக் கொண்டவையாகும். தொல்பழங்குடிப் பண்பாடுகள், நாகரிகங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதங்கள் ஆகியன இந்நாடுகளில் விரிந்து காணப்படும். இவற்றிற்கிடையில் பொதுவுடைமைவாதிகள், பல வேளைகளில் அந்நியப்பட்டுக் காட்சியளிக்கின்றனர். அதாவது, இப்பண்பாடுகளின் மீதான தமக்கிருக்கும் உரிமையையும் அவற்றைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் கடமையையும் உணராதவர்களாகக் காணப்படுகின்றனர்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=20&cad=rja&uact=8&ved=0ahUKEwjrr8fBgObUAhVGqI8KHQWgCdoQFgieATAT&url=http%3A%2F%2Fwww.socialsciencecollective.org%2Ftag%2F%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%2595-%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2F&usg=AFQjCNF0iS8ntRI54P7eDp5swfhfrbbbkQ">{{cite web | url=http://www.socialsciencecollective.org/ | title=மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரிகள் தேங்கிப் போனது ஏன்? | accessdate=30 சூன் 2017}}</ref>
{{பொருளாதார முறைகள்}}
 
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2329832" இருந்து மீள்விக்கப்பட்டது