"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,247 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
[[Image:Nerves of the left upper extremity.gif|thumb|250px|நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன]]
[[நரம்பணு]]க்களின் வெளிநீட்டமாக இருக்கும் [[நரம்பிழை]]கள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தில்]] இருக்கையில் அவை '''நரம்புகள்''' எனப்படும். இந்த நரம்புகளே [[மின்சாரம்|மின்]] [[வேதிப்பொருள்|வேதி]] கணத்தாக்கங்களை [[உடல்|உடலின்]] பல பாகங்களுக்கும் கடத்துகின்றன. மைய நரம்பு மண்டலத்தில் இருக்கும் இந்த நரம்புகளை ஒத்த அமைப்புக்கள் [[:en:Neural tract|tract]] <sup>(''தமிழ்ச்நரம்புப் சொல் தேவைபாட்டை'')</sup> என அழைக்கப்படுகின்றது<ref name=Purves>{{cite book |author=Purves D, Augustine GJ, Fitzppatrick D ''et al.'' |title=Neuroscience |edition=4th |publisher=Sinauer Associates |pages=11–20 |year=2008 |isbn=978-0-87893-697-7 }}</ref><ref name=Marieb>{{cite book |author=Marieb EN, Hoehn K |title=Human Anatomy & Physiology |edition=7th |publisher=Pearson |pages=388–602 |year=2007 |isbn=0-8053-5909-5 }}</ref>. மேலும், நரம்புச் செல்கள், நரம்பு மண்டல அமைப்பின் செயல் அலகுகள் எனப்படுகின்றன. மனித மூளை சற்றேறக்குறைய 860 கோடி நரம்புச் செல்களை உடையது. தவிர, நியூரோகிளியல் செல்கள் அதிகமுள்ளது.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
 
நரம்பிழைகளை மூடியிருக்கும் மயலின் உறைகளை உருவாக்கும் சுவான் கலங்களும் (Schwann cells) இந்த நரம்புகளில் காணப்படும்.
நரம்பிழைகள் (Axons) பல ஒன்றாகக் கூட்டாகச் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சுற்றி உறையொன்றினால் மூடப்பட்டு, ஒரு கட்டாக அமைந்திருக்கும் நீண்ட கயிறு போன்ற அமைப்பாக இந்த நரம்புகள் காணப்படும். நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் உள்ளாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரம்பிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.
 
மைய நரம்புத் தொகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்புகளின் இக்குறிப்பிட்ட அமைப்பானது இடையில் உடையாமல் மிக நீளமாகச் சென்று [[தோல்]], [[கண்]] போன்ற உணர்வு உறுப்புக்களையோ, [[தசை]], [[சுரப்பி]] போன்ற வேறு செயற்படு உறுப்புக்களையோ அடையும். இந் நரம்புகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், பொதுவாக இந்த நரம்புகள் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டத் தொகுதி]]யின் குருதிக் கலன்களுடன் இணைந்து உடல் பாகங்களுக்குள் செல்லும்.
 
==நரம்புச் செல்லின் பகுதிகள்==
மனித உடலின் நுண் அமைப்பாக விளங்கும் நரம்புச் செல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அவை:
# செல் உடலம்
# குறு நரம்பிழைகள்
# நீள் நரம்பிழை<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
 
===செல் உடலம்===
நரம்புகளின் செல் உடலமானது ஒழுங்கற்ற வடிவம் அல்லது பன்முகச் சீரமைவற்ற அமைப்பாக உள்ளது. நரம்புச் செல் அல்லது நரம்புச் செல்லின் உடலமானது '''சைட்டான்''' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த செல் உடலத்தில் அணுக்குழைமம், நிசில் துகள்கள், செல் நுண் உறுப்புகள் போன்றவை காணப்படுகின்றன. இவற்றுள் நிசில் துகளானது புரத சேர்க்கைக்கான ரிபோசொம்களை உடையதாகக் காணப்படும்.
 
===குறு நரம்பிழைகள்===
குறு நரம்பிழைகள் டெண்டிரைட்டுகள் அல்லது டெண்டிரான் எனப்படும். இவை செல் உடலத்திலிருந்து வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்துக் கிளைத்தலுக்கு உள்ளான குட்டை இழைகளாகும். இவ்விழைகள் செல் உடலை நோக்கி மின்தூண்டல்களைக் கடத்துகின்றன.
 
===நீள் நரம்பிழை===
செல் உடலத்திலிருந்து உருவாக்கி மிக நீண்டுக் காணப்படும் இழை நீள் நரம்பிழை ஆகும். இந்த இழையின் முடிவில் கிளைத்துக் காணப்படும். இதன் வேறுபெயர் ஆக்ஸான் என்பதாகும்.இந்நீள் நரம்பிழை பின்முனைக் கிளைத்த, குமிழ் போன்ற அமைப்பில் முடிகின்றது. இவை நரம்புச் செல் இடைவெளிக் குமிழ்கள் எனப்படும். மேலும், இவை நரம்புக் கடத்தும் பொருள் அல்லது நரம்புச் சைகைகளைக் கடத்தும் பொருள் என்னும் வேதிப்பொருளால் நிரப்பப்பட்டுள்ளன. நீள் நரம்பிழையிலுள்ள அணுக்குழைமம் நரம்பிழைக் குழைமம் (ஆக்சோ பிளாசம்) என்றழைக்கப்படுகிறது. இந்த நரம்பிழையைச் சூழ்ந்துள்ள '''மையலின்''' என்னும் உறை பல அடுக்குகளைக் கொண்ட சுவான் செல்களால் உருவானதாகும். இதன் வெளிப்புற அடுக்கு '''நியூரிலேமா''' எனப்படும். இதன் கிளைத்த முடிவுப் பகுதிகளைத் தவிர, மற்றவற்றை நியூரிலேமா முழுவதும் போர்த்தியுள்ளது.
 
நீள் நரம்பிழையின்மீது மையலின் உறையால் தோற்றுவிக்கப்படும் இடைவெளிகள், '''ரேன்வியரின் கணுக்கள்''' என்றழைக்கப்படுகின்றன. இக்கணுக்களில் நியூரிலேமா தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது. மையலின் உறையானது மின்தூண்டல் விரைவாகக் கடத்தப்படுவதற்கு உதவி செய்கிறது.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
 
===நரம்புகளின் வகைகள்===
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2331308" இருந்து மீள்விக்கப்பட்டது