தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அருதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் [[பூமி]]யின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த [[முதுகெலும்பி|முதுகெலும்புள்ள]] [[விலங்கு|விலங்கினங்களைக்]] குறிக்கின்றன. இவற்றின் வல்லாண்மைக் காலமானது, சுமார் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ட்ரையாசிக்-ஜுராசைக் யுகங்களின் அழிவுக்குட்பட்ட காலமாகும். இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து ஜுராசிக்-க்ரட்டேசியஸ் யுகங்கள் வரை தொடர்ந்து க்ரட்டேசியஸ்-பாலியோஜீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு [[உயிரினப் பேரழிவுகள்|பேரழிவு நிகழ்வு]] காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.
 
படிம ஆய்வுகளின்படி ஜுராசிக் யுகத்தில் வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான [[தெரோபோடு]] என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள[[இறக்கை]]<nowiki/>களுள்ள [[பறவை]] இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன.
 
மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.
 
தொன்மாக்கள் [[வகைப்படுத்தல்|வகைப்பாடு]], புறத்தோற்றம், [[சுற்றுச்சூழல்|சூழ்நிலை]] அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தொல்லியல் ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைப்பெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும், சில தாவர உண்ணிகளாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை களாகவும் அறியப்பட்டன.
 
தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: [[ஒருநிலக் கொள்கை]].) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது