அமெரிக்க உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் [[சுதந்திர மாநிலம் (ஐக்கிய அமெரிக்கா)|சுதந்திர மாநிலங்களையும்]], அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனினதும்]] அவர் சார்ந்திருந்த [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் [[அடிமை முறை]] விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.<ref>[https://cwemancipation.wordpress.com/2011/04/17/slavery-and-secession-1860-census-statistics/ "Date of Secession Related to 1860 Black Population"], America's Civil War</ref> ஏனெனில், 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன. ஆனால், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழித்திட முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் பெரும்பாலோனோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையையே அதிகம் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்களுக்கு அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க விரும்பவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ஓர் உடன்பாடு ஏற்பட்டது. தென் மாநிலங்களில் இருந்த அடிமைமுறையில் மாற்றமேதுமில்லை. அதேசமயம், வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=18&cad=rja&uact=8&ved=0ahUKEwjszs3rm-rUAhVCMY8KHbv4Cy0QFgijATAR&url=http%3A%2F%2Fwww.tamilpaper.net%2F%3Ftag%3D%25E0%25AE%2589%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AF%258D&usg=AFQjCNGTIfQYmmOvpnY9822MYJmNKTdX7Q">{{cite web | url=http://www.tamilpaper.net/ | title=தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ | accessdate=2 சூலை 2017}}</ref>
 
இந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த [[அமெரிக்கத் தலைவர்]] தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் '''ராபர்ட் ஈ லீ''' ஆவார். [[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் [[போர்க்கப்பல்]]களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான [[ராபர்ட் ஈ. லீ]], [[ஜோசேப் ஜான்ஸ்டன்]] ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]]வில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன.
 
லீ, வெர்ஜீனியா மாநிலத்தில் இராணுவத் தொன்மரபு குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற [[வெஸ்ட் பாயிண்ட் இராணுவக் கல்லூரி]]யில் படிப்பைத் தொடர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை பூர்த்திசெய்தவர், பின், அமெரிக்க இராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் லீயின் பங்ககளிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இதன் காரணமாக, அமெரிக்க இராணுவத்தில் பல்வேறு பதவி உயர்வுகளைப் படிப்படியாகப் பெற்றார். 1861 இல் உள்நாட்டுப் போர் மூண்டபோது லீ, ராணுவத் தலைவர் (கர்னல்) பதவியில் இருந்தார். லீக்கு அடிமைமுறை குறித்து அழுத்தமான கருத்துகள் ஏதும் கிடையாது. சமகால அமெரிக்கர்களிடையே, கறுப்பர்கள் வெள்ளையர்களைவிடக் கீழானவர்கள் என்பது பெரும்பான்மையான கருத்தாகக் காணப்பட்டது. அந்தக் கருத்திற்கு லீ உடன்பட்டார். அவருடைய சொந்த மாநிலமான வெர்ஜீனியா, தென் மாநிலங்களில் ஒன்றாக அமைந்திருந்தாலும், வட மாநிலங்களின் எல்லையிலிருந்தது. அங்குப் பண்ணைத் தோட்டங்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. அந்த மாநிலத்தில் இருந்த கறுப்பின அடிமைகள், வீட்டுப் பணியாளர்களாகப் வேலைசெய்து வந்தனர். மேலும், பண்ணையடிமைகள் படும் இன்னல்களை லீ நேரடியாக அறிந்திருக்கவில்லை. இதனால், அடிமைமுறையை, அவர் ஒழிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்றே எண்ணினார். தவிர, முழு விடுதலையடைந்து கருப்பர்களால் தனியே வாழ்வது கடினம்; வெள்ளையர்களின் வழிகாட்டுதல் ஒன்றே மேம்படுத்தும் என லீ நினைத்தார். அதே சமயம், அடிமைமுறைக்காக நாட்டைப் பிளவுப்படுத்திப் புது நாடு உருவாக்குவதையும் அவர் விரும்பாதவராக இருந்தார். தென் மாநிலத்திலுள்ள அரசியல்வாதிகளைப் பற்றிய நல்லெண்ணமும் அவரிடம் கிடையாது.
 
[[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் [[போர்க்கப்பல்]]களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான [[ராபர்ட் ஈ. லீ]], [[ஜோசேப் ஜான்ஸ்டன்]] ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]]வில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன.
 
1861 ஏப்ரல் 12 ஆம் நாள் கூட்டமைப்பின் படைகள் [[தென் கரோலினா]]வின் [[சம்ட்டர் கோட்டை]]யில் இருந்த ஐக்கிய அமெரிக்காவின் படைகளைத் தாக்கியபோது போர் வெடித்தது. ஆபிரகாம் லிங்கன் பெரிய தொண்டர் போர்ப்படையைத் திரட்டினார். இந் நிலையில் மேலும் நான்கு தென் மாநிலங்கள் பிரிவதாக அறிவித்தன. போரின் முதல் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா எல்லை மாநிலங்களில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியதுடன், தென் மாநிலங்கள் மீதான கடல்வழித் தடையையும் ஏற்படுத்தியது. இரு பகுதியினரும் படைகளையும் பிற வளங்களையும் குவித்து வந்தனர். 1862 இல் இடம்பெற்ற, [[ஷைலோ போர்]] (Battle of Shiloh), [[ஆண்டீடாம் போர்]] (Battle of Antietam) போன்ற போர்களில் ஐக்கிய அமெரிக்கா முன்ன கண்டிராத அளவுக்குப் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டன. 1862 செப்டெம்பரில், தென் மாநிலங்களில் அடிமை முறையை ஒழிப்பதே போரின் நோக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் படைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது