|
|
'''மக்கள் ஜனநாயகம்''' என்பது மார்க்சிய-லெனினியத்தின் தத்துவார்த்த கருத்தாக கருதப்படுகிறது. இந்த தத்துவத்தின் வளர்ச்சி பெருவாரியாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகே வளர்ச்சி கண்டது.
== வரலாறு ==
'''ஜார்ஜ் லூகஸ்''' என்பவர் முதன் முதலில் ஜனநாயக குடியரசை செயல்படுத்த முன்வந்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்று 1929-ல் வெளியான தன்னுடைய '''ப்ளம் தீஸிஸ்''' -ல் பரிந்துரைத்துள்ளார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவில் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த '''[[ஜோசப் ஸ்டாலின்''']], அனைத்து கிழக்கு ஐரோப்ப கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் ஜனநாயகத்திற்க்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அறிவித்தார். '''[[நாஸி ஜேர்மனி|நாஸி ஜெர்மணி''']] கிழக்கு ஐரோப்பாவில் தோல்விகண்ட பிறகு மார்க்ஸிச-லெனினிய கோட்பாட்டாளர்கள் சோசியலிஸத்தை சோவியத் சிகப்பு படையின் உதவியுடன் அமைதியான முறையில் அங்கு பரப்ப ஆரம்பித்தார்கள். பல கிழக்கு ஐரோப்ப நாடுகளில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக ஆட்சிக்கு வரவில்லை, மாறாக பல முற்போக்குக் கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றினர். மற்ற ஐரோப்ப மாநிலங்கள், தொழிலாளர்களாலோ அல்லது பொதுவுடைமைக் கட்சிகளாலோ ஆட்சிசெய்யப்பட்டன. இதுபோல மாவோ[[மா சே துங்]], '''அனைத்துவர்க்க ஜனநாயகம்''' என்று ஒரு கருத்தை 1940ல் ''On New Democracy'' என்ற கட்டுரை மூலம் முன்வைத்தார்.
|