அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
 
கிரேக்க நகர அரசுகள் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளன. மக்கள் அனைவரும் போர் வீரர்களாகவும்,ஆட்சிமன்ற உறுப்பினர்களாகவும் காணப்பட்டனர். அக் கிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையிலிருந்தது. இதன் உறுப்பினர்கள் சட்ட ஆக்கச் செயற்பாட்டிற்காக நேரில் ஒன்று கூடினர். அதாவது, கிரேக்க நகர அரசில் மக்கள் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
==உரோமை நகர அரசு மற்றும் பேரரசுகள்==
 
இத்தாலியில் இருந்த சிறிய நகர அரசுகளில் ஒன்றுதான் உரோமை நகர அரசு என்றழைக்கப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளைப் போலவே, இத்தாலிய உரோமை நகர அரசுகளும் புவியியல் ரீதியாகப் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுக் காணப்பட்டன. உரோமை நகர அரசானது கொடுங்கோல் ஆட்சியாக இருந்தது. பின்னர், மக்கள் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தும் அவர்களைத் தோற்கடித்தும் குடியரசு ஆட்சியினை நிறுவினர். உரோமையில் தோற்றுவிக்கப்பட்ட குடியாட்சி முறையில் இரட்டை நிர்வாக முறை நிலவியது. தொன்மரபின் வழி வந்த ஆட்சியாளர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனற்சபை உறுப்பினர்களும் இணைந்து ஆட்சி புரிந்து வந்தனர். இதனால், உரோமைக் குடியரசு உயர்குடி சிறுகுழுவாட்சி முறையாக மாற்றம் பெற்றது.
 
ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததன் காரணமாக உரோமை அரசு உரோமைப் பேரரசாக மாறியது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஜெர்மனி, வட ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள் உரோமையின் ஆட்சிப் பகுதிகளாக ஆயின. உரோமைப் பேரரசும் கொடுங்கோல் தன்மையுடன் ஆட்சி மேற்கொண்டது. உரோமைப் பேரரசர் அனைத்து வகைப்பட்ட அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் உரோமையின் சட்டங்களாக காணப்பட்டன. கிறித்தவம் அரச சமயமாக்கப்பட்டது. ஆன்மீக உரிமைக் கோட்பாடு விவரணைச் செய்வது போன்று அரசர் இறைவனின் தூதராகக் கருதப்பட்டார். அவரைக் கீழ்ப்படிவது என்பது இறைவனைக் கீழ்ப்படிவதற்கு ஈடாகப் பார்க்கப்பட்டது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது