அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 70:
 
ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததன் காரணமாக உரோமை அரசு உரோமைப் பேரரசாக மாறியது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஜெர்மனி, வட ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள் உரோமையின் ஆட்சிப் பகுதிகளாக ஆயின. உரோமைப் பேரரசும் கொடுங்கோல் தன்மையுடன் ஆட்சி மேற்கொண்டது. உரோமைப் பேரரசர் அனைத்து வகைப்பட்ட அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் உரோமையின் சட்டங்களாக காணப்பட்டன. கிறித்தவம் அரச சமயமாக்கப்பட்டது. ஆன்மீக உரிமைக் கோட்பாடு விவரணைச் செய்வது போன்று அரசர் இறைவனின் தூதராகக் கருதப்பட்டார். அவரைக் கீழ்ப்படிவது என்பது இறைவனைக் கீழ்ப்படிவதற்கு ஈடாகப் பார்க்கப்பட்டது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
உரோமைப் பேரரசு அரசியல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்தது. அரசிற்குள் குடும்ப மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கினை வலியுறுத்திச் செயற்படுத்தியது. இருப்பினும், உரோமைக் குடிமக்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் வரையறைப்படுத்தி விரிவுப்படுத்தியது. '''நாடுகளின் சட்டம்''' என்பது உரோமைப் பேரரசின் அடிப்படைக் கொள்கையாக விளங்கியது. இதுவே, உரோமர்களின் சட்டமுறைமையின் வடிவமாக அமையப் பெற்றிருந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது