அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
உரோமைப் பேரரசு அரசியல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்தது. அரசிற்குள் குடும்ப மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கினை வலியுறுத்திச் செயற்படுத்தியது. இருப்பினும், உரோமைக் குடிமக்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் வரையறைப்படுத்தி விரிவுப்படுத்தியது. '''நாடுகளின் சட்டம்''' என்பது உரோமைப் பேரரசின் அடிப்படைக் கொள்கையாக விளங்கியது. இதுவே, உரோமர்களின் சட்டமுறைமையின் வடிவமாக அமையப் பெற்றிருந்தது.
 
==நிலப்பிரபுத்தவநிலவுடமையாளர் அரசு==
 
உரோமைப் பேரரசில் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. குடிமைச் சேவைகளில் காணப்பட்ட துணிவின்மைப் போக்குகள், அச்சவுணர்வு தன்மைகள் ஆகியவற்றால் மக்களிடையே அவநம்பிக்கைகள் உருவாயின. இவற்றிலிருந்து பேரரசை மீட்டெடுப்பது என்பது கடினப் பணியாக இருந்தது. உரோமைப் பேரரசு இதன்காரணமாகப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்காலக் கட்டத்தில் நிலவுடமையாளர்கள் எழுச்சிப் பெற்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால், நிலவுடமையாளர்கள் தம்மிடம் பணியாற்றும் எளியவர்கள் மீது செலுத்தப்பட்டு வந்த அதிகாரம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.
வரிசை 79:
இவ் அரசில் ஒவ்வொரு மாவட்ட நிலப்பகுதியும் ஒவ்வொரு நிலவுடமையாளரின் கீழ் இருந்தது. இவர்கள் தம்மை குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு ஆட்சிசெய்து வரத் தொடங்கினர். உரோமை அரசியல் அதிகாரமானது நிலவுடமையுடன் தொடர்புடையதாக இருந்தது. இச்சூழ்நிலையில் வலிமை பெற்ற நிலவுடமையாளர்கள் வலிமை குன்றிய நிலவுடமையாளர் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர். இதன்விளைவாக, மீளவும் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின. போர் நிகழ்வுகள் மற்றும் திருமண உறவுகள் மூலமாக சிற்றரசுகள் பேரரசுகளாக மாற்றம் பெற்றன. நிலவுடமைக் கோட்பாட்டின்படி அரசன் இறைவனின் ஊழியனாகச் செயல்பட்டு அரசினை வழிநடத்த கடமைப்பட்டவனாவான். அதுபோல, அரசர்கள் தமது இறைமையினை நிலவுடமையாளர்களுக்குச் செலுத்தும் விசுவாசத்தினூடாகப் பெற்றுக்கொள்ளும் வழக்கிருந்தது. இதனால், அரசன் இறந்தபின் அவனுடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் நிலவுடமையாளர்களுக்குச் சொந்தமானது.
திருச்சபைக் காலத்தில் சமயரீதியாக உரோமை அரசுகளுக்கிடையில் இணக்கப் போக்குகள் நிலவின. இது அனைத்துலக பேரரசு என்பதைத் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு உலக அரசுகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது.
 
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது