அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 75:
==நிலவுடமையாளர் அரசு==
 
உரோமைப் பேரரசில் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. குடிமைச் சேவைகளில் காணப்பட்ட துணிவின்மைப் போக்குகள், அச்சவுணர்வு தன்மைகள் ஆகியவற்றால் மக்களிடையே அவநம்பிக்கைகள் உருவாயின. இவற்றிலிருந்து பேரரசை மீட்டெடுப்பது என்பது கடினப் பணியாக இருந்தது. உரோமைப் பேரரசு இதன்காரணமாகப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்காலக் கட்டத்தில் நிலவுடமையாளர்கள் எழுச்சிப் பெற்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால், நிலவுடமையாளர்கள் தம்மிடம் பணியாற்றும் எளியவர்கள் மீது செலுத்தப்பட்டு வந்த அதிகாரம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
இவ் அரசில் ஒவ்வொரு மாவட்ட நிலப்பகுதியும் ஒவ்வொரு நிலவுடமையாளரின் கீழ் இருந்தது. இவர்கள் தம்மை குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு ஆட்சிசெய்து வரத் தொடங்கினர். உரோமை அரசியல் அதிகாரமானது நிலவுடமையுடன் தொடர்புடையதாக இருந்தது. இச்சூழ்நிலையில் வலிமை பெற்ற நிலவுடமையாளர்கள் வலிமை குன்றிய நிலவுடமையாளர் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர். இதன்விளைவாக, மீளவும் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின. போர் நிகழ்வுகள் மற்றும் திருமண உறவுகள் மூலமாக சிற்றரசுகள் பேரரசுகளாக மாற்றம் பெற்றன. நிலவுடமைக் கோட்பாட்டின்படி அரசன் இறைவனின் ஊழியனாகச் செயல்பட்டு அரசினை வழிநடத்த கடமைப்பட்டவனாவான். அதுபோல, அரசர்கள் தமது இறைமையினை நிலவுடமையாளர்களுக்குச் செலுத்தும் விசுவாசத்தினூடாகப் பெற்றுக்கொள்ளும் வழக்கிருந்தது. இதனால், அரசன் இறந்தபின் அவனுடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் நிலவுடமையாளர்களுக்குச் சொந்தமானது.
திருச்சபைக் காலத்தில் சமயரீதியாக உரோமை அரசுகளுக்கிடையில் இணக்கப் போக்குகள் நிலவின. இது அனைத்துலக பேரரசு என்பதைத் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு உலக அரசுகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
==நவீன தேசிய அரசுகள்==
 
நவீன தேசிய அரசுகளின் வளர்ச்சியில்,பிரெஞ்சுப் புரட்சி தலையாயதாகும். கி. பி. 1789 இல் பிரெஞ்சு மக்கள் கொடுங்கோன்மை முடியாட்சிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் மூலம் மக்களாட்சி அரசியலை முன்வைத்தனர். விடுதலையும், இறையாண்மையும் கொண்ட குடியரசாகப் பிரான்சை அறிவித்துக் கொண்டனர். '''அனைத்து மனிதர்களும் சில உரிமைகளுடன் பிறக்கின்றனர்; சமத்துவமாக உருவாக்கப்படுகின்றனர்''' என்கிற கருத்துக்களைத் தேசிய அரசுகள் வலியுறுத்தின.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் அதிகரிப்புகள், பொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்திகளின் அமைப்புமுறை என்பன தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வித்திட்டன. அனைத்துலக வர்த்தகம் துரிதமடைந்ததுடன், தேசிய வர்த்தகமும், வங்கித் தொழிலும் அதிகரித்தன. மேலும், போக்குவரத்திலும், தகவல் தொடர்பிலும், சமூகப்பொருளாதார வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இம்மாற்றங்கள் நவீன தேசிய அரசுகளின் எழுச்சிக்கு உறுதுணையாக அமைந்திருந்தன.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://tkm.politicalmanac.com/2014/09/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581-%25E0%25AE%25A4%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF/&ved=0ahUKEwiS7MaT8OrUAhVGsI8KHfb5AogQFgg2MAQ&usg=AFQjCNGTOfKLjRMsXB7NN6qbFjGWEJ6-rg">{{cite web | url=http://tkm.politicalmanac.com/2014/09/அரசு-தோற்றமும்-வளர்ச்சி/ | title=அரசு: தோற்றமும் வளர்ச்சியும் | accessdate=2 சூலை 2017}}</ref>
 
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது