வாளவாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இது தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''==பெரிய வாளவாடி==''' பெரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:43, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

==பெரிய வாளவாடி==

பெரிய வாளவாடி எனும் ஊர் திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூக்காவில் அமைந்துள்ளது. இது உடுமலைப்பேட்டையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. '==

ஊரின் பழைய பெயர்:

இந்த ஊரின் பழைய பெயர் “ அமணசமுத்திரம்”. பெரியவாளவாடியிலிருந்து தெற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை என்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலின் நினைவாக இவ்வூர் அமணசமுத்திரம் என்று அழைக்கப்பட்டது. பின் நாளடைவில் பெரிய வாளவாடி, சின்ன வாளவாடி எனப் பிரிக்கப்பட்டது.

ஊரில் உள்ளவை:

பெரிய வாளவாடியில் ஒரு தொடக்கப்பள்ளியும், ஒரு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது .இதன் மூலம் பெரிய வாளவாடியைச் சுற்றியுள்ள வேலூர், தீபாலபட்டி, மொடக்குப்பட்டி, பழையூர், வட பூதனம், சுண்டக்காம்பாளையம் போன்ற பல கிராம மக்கள் பயனடைகின்றனர்.

ஊரில் கார்ப்பரேசன் வங்கி , நியாயவிலைக்கடை, கூட்டுறவு அங்காடி, தபால் நிலையம் போன்றவை உள்ளன.

கிராம மக்களின் தொழில்:

இக்கிராம மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் ஆகும்.

இக்கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன.நகரங்களின் மாசுக்களில் இருந்து ஒதுங்கி இயற்கை சூழலில் பெரிய வாளவாடி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்:

https://bankifsccode.com/CORPORATION_BANK/TAMIL_NADU/COIMBATORE/PERIYA_VALAVADI

http://soki.in/periyavalavadi-udumalpet-tiruppur/

பகுப்பு : திருப்பூர் மாவட்ட கிராமங்கள் உடுமலை தாலூக்கா கிராமங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளவாடி&oldid=2336369" இலிருந்து மீள்விக்கப்பட்டது