வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
==வளர்சிதை மாற்றக்குறைபாட்டு நோய்கள்==
===நீரிழிவு நோய்===
ஆரோக்கியமான உடல்நலம் கொண்ட மனிதனின் குருதியில் சர்க்கரை அளவு, உணவுக்கு முன்பு 80 - 120 மி.கி. /டெசி.லி. என்னும் அளவில் காணப்படும். உணவுக்குப் பின்பு அதிக அளவிலான இரத்தச் சர்க்கரை (Glucose) குருதியில் அதிகரிக்கும் போது இவை கரையாத கிளைகோஜனாக மாற்றப்படும். பிறகு, அது பிற்காலத் தேவைக்காக, கல்லீரல் மற்றும் தசை ஆகியவற்றில் சேமிக்கப்படும். தேவை ஏற்படும் போது அக் கிளைகோஜன் மீண்டும் இரத்தச் சர்க்கரையாக மாற்றப்பட்டு குருதியில் சேர்க்கப்படும். இச்செயற்பாடுகள் அனைத்தும் கணையத்தில் லாங்கர்கான் திட்டுகளில் உள்ள பீட்டா, ஆல்பா செல்களால் சுரக்கப்படும் இன்சுலின், குளூக்கோகான் ஆகிய வளரூக்கிகளால் (Hormones) கட்டுப்படுத்தப்படுகின்றது. இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபோது, குருதியில் காணப்படும் அதிகப்படியான சர்க்கரை பயன்படுத்தப்படாது கழிவுநீக்கச் செயற்பாட்டில் சிறுநீருடன் கலந்து வெளியேற்றப்படும். இந்நோய்க்கு நீரிழிவு (Diabetes Mellitus) என்றழைக்கப்படுகிறது. இதேபோல், இதய நோய்கள், சிறுநீரகச் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், அல்சீமியர் நோய், மூளையைப் பாதிக்கும் பக்கவாத நோய்கள் முதலானவை வளர்சிதைமாற்றச் செயல்பாட்டுக் குறைவினால் உண்டாகும் நோய்களாகும்.<ref name="Science Book-10"/></ref>
 
===மரபியல் நோய்கள்===
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது