எண் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
 
== இயற்கணித எண் கோட்பாடு ==
 
==டயோஃபாண்டஸ் (Diophantus)==
இவர் சிர்க்கா என்னும் நகரத்தில் வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், டயோபாண்டஸ் ஒரு ஹெல்லனிஷ்டிக் கணித அறிஞர் என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலத்தை ஒருதரப்பினர் கி. பி. 200 இலிருந்து கி. பி. 284 என்றும், மற்றொரு தரப்பினர் கி. பி. 214 இலிருந்து கி. பி. 294 என்றும் எடுத்துரைக்கின்றனர். இவர் பதின்மூன்று புத்தகங்கள் அடங்கிய ''அரித்மேட்டிகா'' என்னும் நூலின் தொகுப்பாசிரியர் ஆவார். இந்நூல் கணிதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகும். மேலும், இந்நூலில் தற்போது ஆறு நூல்கள் மட்டுமே எஞ்சிக் காணப்படுகின்றன. வடிவியல் முறைகள், பாபிலோனியக் கணிதவியல் ஆகியவற்றிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. தோராய தீர்வுகளுக்குப் பதிலாக, இவர் எப்போதும் துல்லியமிக்க தீர்வுகளையே முன்னிலைப்படுத்தினார். எனினும், இந்த நூலானது கிரேக்க மரபுக் கணிதவியல் விளக்கங்களுடன் சிறிதளவே பொதுவாகக் காணப்பட்டது.<ref>{{cite book | title=கணிதம் ஒன்பதாம் வகுப்பு | publisher=பள்ளிக கல்வித்துறை, சென்னை - 6 | year=2017 | pages=ப. 69}}</ref>
 
[[விகிதமுறாஎண்]]களின் வரையறைகளையும் அதை ஒட்டி அவைகளின் கோட்பாடுகளையும் [[டெடிகிண்ட்]] (1831-1899) செய்தார். அவர்தான் [[சீர்மங்களின்]] கோட்பாட்டைத் தொடங்கிவைத்தவர். இதற்கு மூலப் பொருளே [[இயற்கணிதம்]] தான். முக்கியமாக ஒரு எண்ணை அதன் காரணிகளின் பெருக்குத் தொகையாகக் காட்டுவதில், (அ-து, <math>84 = 2\times 2\times 3\times 7</math>) உள்ள சிக்கல்களில் இவ்வாய்வு ஆரம்பித்து, ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்திற்காக வெகுவாக வளர்ந்து இன்று '''இயற்கணித எண் கோட்பாடு''' (Algebraic Number Theory) என்று எண் கோட்பாட்டின் ஒரு பிரிவாகவே பிரிந்து இயங்கி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எண்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது