சுமேரியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சுமேரியக் கட்டிடக்கலை''' என்பது [[மெசொப்பொத்தேமியா]] என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய [[ஈராக்]]கில் வாழ்ந்த [[சுமேரியர்]]களால் வளர்த்தெடுக்கப்பட்ட [[கட்டிடக்கலை]]யைக் குறிக்கும். இவர்களுடைய காலம் கிமு 4 ஆம் ஆயிரவாண்டு முதல் கிமு 3 ஆம் ஆயிரவாண்டு வரையிலாகும். மெசொப்பொத்தேமியாவில் பாரிய கட்டிடங்களை அமைக்கும் வழக்கம், ஏறத்தாழ கிமு 3100 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், சுமேரியர்களுடைய நகரங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே எழுதும்[[எழுத்து முறையும்முறை]]யும் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் இருந்து கிமு 3 ஆவது ஆயிரவாண்டின் தொடக்கம் வரையான 500 ஆண்டுக்காலப் பகுதியில் சுமேரியர்களால் அமைக்கப்பட்ட சமயச் சார்புடைய [[கட்டிடம்|கட்டிடங்கள்]] கட்டிடக்கலை வடிவமைப்புக்கான முன் முயற்சிகளைத் தெளிவாகக் கட்டுகின்றன. இக் கோயில்கள் இரண்டு வகைகளாகக் காணப்பட்டன. ஒரு வகை மேடைகள் மீது அமைக்கப்பட்ட சிறிய கட்டிடங்களாகும். கோயில்களும், மேடையும் [[சுடாத செங்கல்|சுடாத செங்கற்களினால்]] அமைக்கப்பட்டன. இரண்டாவது வகைக் கோயில்கள் மேடையின்றி நில மட்டத்தில் அமைக்கப்பட்டன.
 
தொடக்கத்தில் சிறியவையாக இருந்த மேடைக் கோயில்கள் காலம் செல்லச் செல்லப் பெரிய அளவில் கட்டப்பட்டன. கிமு 2100 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட, ''ஊர்'' என்னும் நகரத்தில் இருந்த கோயில் மேடை 60 மீ நீளமும், 45 மீ அகலமும், 23 மீ உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. இம் மேடைகள் ''சிகரட் (ziggurats)'' என அழைக்கப்பட்டன. இப் பெயர் ''உயரமானது'' என்னும் பொருள் கொண்ட [[அசிரிய மொழி]]ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுமேரியக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது