அகேட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அகேட்'''(Agate) மலைப்பாறைகளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''அகேட்'''(Agate) மலைப்பாறைகளில் கிடைக்கும் ஒருவகை அழகான கல். இதிலிருந்து ஆபரணங்கள், குடைப்பிடி, கத்திப்பிடி முதலியன செய்கிறார்கள். அறிவியல் ஆய்வுச்சாலைகளில் கட்டியாகவுள்ள சேர்மங்களைப் பொடியாக்க அகேட் கல்லும் பயன்படுகின்றது. அகேட்டுகளில் சில வெவ்வேறு நிறமுள்ள அடுக்குகளை உடையவை. எரிமலையிலிருந்து வந்த பிழம்புகள் குளிரும்போது நீர் உட்புகுந்து நீரிலுள்ள சிலிகா பேன்ற பொருள்களுடன் கலந்து வெவ்வேறு நிறமுள்ள அடுக்குகளாகப் பாறைகளுடன் உறைகின்றன. மெக்சிகோ அகேட் என்பதில் கண்ணைப் போன்ற ஒரு வளையம் காணப்படுகிறது. இதை சைக்ளோப்ஸ் என்பது கிரேக்கப் புராணங்களில் வரும் ஒற்றைக் கண் அரக்கனைக் குறிக்கிறது. அகேட் கற்கள் வட மெரிக்கா தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா முதலிய கண்டங்களிலுள்ள மலைகளில் காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அகேட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது