தொல்லியல் பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''தொல்லியல் பதிவு''' என்பது, கடந்தகால மனித நடவடிக்கைகளின் எச்...)
 
No edit summary
'''தொல்லியல் பதிவு''' என்பது, கடந்தகால மனித நடவடிக்கைகளின் எச்சங்களை உள்ளடக்கும் தொல்லியல் சான்றுகளைக் குறிக்கும். கடந்தகாலத்தைப் பகுத்தாய்ந்து மீளுருவாக்கம் செய்ய்வதற்காகத் [[தொல்லியலாளர்]] இவற்றைத் தேடிப் பதிவு செய்கின்றனர். முக்கியமாக இவை [[அகழ்வாய்வு|அகழ்வாய்வில்]] வெளிக்கொணரப்பட்ட பொருட்களாக அமைகின்றன.
 
குறிப்பிட்ட தொல்லியல் களம் ஒன்றில் உள்ள தொல்லியல் பதிவு சில வேளைகளில் தொல்லியல் தொடரியம் (archaeological sequence) என்றும் அழைக்கப்படுவது உண்டாயினும், இரண்டு சொற்களும் ஒரே பொருள் தருவன அல்ல. தொல்லியல் பதிவு என்பது முழுமையான பொருள் தருவதாக இருக்கிறது. இச்சொல்லை தொல்பொருட்களுக்கும், பிற சான்றுகளான உயிரியல் பொருட்கள் போன்றவற்றுக்கும், அவற்றுடன் இணைந்த தொடர்புகளுக்கும், [[அடுக்கியல்]] தொடர்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் தொல்லியல் தொடரியம் என்பதை, அடுக்கியல் ஆய்வினால் அல்லது பிற காலங்கணிக்கும் முறைகளினால் தீர்மானிக்கப்படும் காலவரிசை தொடர்பிலேயே பயன்படுத்த முடியும்.
 
 
தொல்லியல் பதிவுகள் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத தொல்லியல் களங்களை அடக்குகிறது. இது களத்திலேயே பாதுகாக்கப்பட்ட தொல்பொருட்களையும், அருங்காட்சியகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படும் தொல்பொருட்களையும், தொல்லியல் ஆய்வுகள், விளக்கங்கள் தொடர்பான ஆவணங்களையும் உள்ளடக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/234916" இருந்து மீள்விக்கப்பட்டது