வீரமாகாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வீரமாகாளா்
 
சி மேற்கோள் இணைக்கப்பட்டுள்ளது
வரிசை 3:
இவர்கள் இலக்கியங்களுள் மூன்று வகையினராய்க் காணப் பெறுகின்றனர். வீரபத்திரர்க்கும் காளிதேவிக்கும் பிறந்தவா் முதல் வகையினா். அவா் அரிகரபுத்திரா்க்குச் சேனாபதியாகப் பணியாற்றியவா். இந்திரன் கோட்படி இந்திராணி தனித்திருக்கையில் அாிகரபுத்திரா் கட்டளையிட வீரமாகாளா் அவளுக்குக் காவல்பூண்டிருந்தாா். அவ்வமயம் சூரபதுமன் தங்கை அசமுகி என்பவள் இந்திராணியைத் தூக்கிக் கொண்டு சூரபதுமனிடம் செல்ல முயன்றாள். வீரமாகாளா் தடுத்தும் அசமுகி கேட்கவில்லை. அதனால் சினமுற்று இந்திராணியைத் தூக்கிச் சென்ற அசமுகியின் கரத்தினையும், அவளுக்குத் துணையாக வந்த அவள் தோழி துன்முகியின் கரத்தினையும் வீரமாகாளா் வெட்டி வீழ்த்தினாா். வீரமாகாளா் தம் பெயருக்கு ஏற்ப உக்கிரமூா்த்தியாகேவ காணப்பெறுவர் என்பதை "பெய்யாிற் பெரிதும் வெய்யோன் வீரமாகாளன் என்போன்," என்று கந்தபுராணம் கூறுகிறது. இருப்பினும் தம்மை வழிபடுபவா்களுக்கு மிகவும் போற்றத்தக்க சாா்ந்த மூா்த்தியாகவே திகழ்ந்து அருள்பாலிக்க வல்லவா் என்பது தெரிகிறது.
இரண்டாம் வகையினா் சிவனைப் போன்றே மூன்று கண்களும் இடக்கையிற் கபாலமும் வலக்கையிற் சூலமும்கொண்டு பாம்பின் புணாலும் அணிந்து காணப் பெறுபவா். அவா் கருத்த நிறமுடையவா், வின்கோலம் போன்றே கோலங்கொண்டு காட்சியளிப்பவா் என நூல்கள் கூறுகின்றன.
மூன்றாம் வகையினா் சிவகணத்தலைவா்களுள் ஒருவராவாா். அவா் கருமை நிறம், முக்கன், வலக்கரத்தில் சூலம், இடக்கரத்தில் கபாலம் தாங்கிய நிலையில் காணப்பெறுபவா் எனத்தெரிகிறது.<ref>வாழ்வியற் களஞ்சியம் தொகுதி பதினான்கு, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூா். பக்கம்- 567</ref>
"https://ta.wikipedia.org/wiki/வீரமாகாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது