தொலையுணர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
 
எனினும் இச்சொல்லின் தற்காலப் பயன்பாடு, பொதுவாகப் படவாக்க உணர் நுட்பங்களைப் பயன்படுத்துவதையே குறிக்கிறது. இங்கு வானூர்திகள், விண்கங்கள், செய்மதிகல் அல்லது வேறிடங்களில் பொருத்தப்பட்ட கருவிகள் பயன்படுகின்றன. [[மருத்துவப் படவாக்கம்]] போன்ற பிற படவாக்கத் துறைகள் இதிலிருந்தும் வேறுபட்டவையாகவே கருதப்படுகின்றன.


தொலையுணர்தலில், நேரடித் தொலையுணர்தல், மறைமுகத் தொலையுணர்தல் என இரு வகைகள் உண்டு. மறைமுகத் தொலையுணர்தலில், உணரிகள், பொருளினால் வெளிவிடப்படும் அல்லது தெறிக்கப்படும் இயற்கைக் [[கதிர்வீச்சு|கதிர்வீச்சை]] உணர்ந்தறிகின்றன. மறைமுக உணரிகளால் உணரப்படும் மிகப் பொதுவான கதிர்வீச்சு சூரிய ஒளி ஆகும். சாதாரண [[நிழற்படக் கருவி]]கள், [[அகச்சிவப்புக் கதிர்]]க் கருவிகள், ரேடியோமானிகள் என்பன மறைமுகத் தொலையுணரிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். நேரடித் தொலையுணர்தலில் கருவிகள் தாமே கதிர்வீச்சை வெளியிட்டுப் பொருட்களையும், இடங்களையும் துருவுகின்றன. [[ராடார்]]கள் நேரடித் தொலையுணர்தலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தொலையுணர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது