பயனர்:Tnse ranjitham cbe/மணல்தொட்டி உருவாக்கம் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இயற்கை முறை பூச்சிக் கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

17:40, 7 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

இயற்கை முறை பூச்சிக் கட்டுப்பாடு

இயற்கை முறை பூச்சிக் கட்டுப்பாடு என்பது இயற்கையில் பூச்சிகளின் எண்ணிக்கை பல இயற்கைச் சக்திகளான காலநிலை, இடத்தின் அமைப்பு, பூச்சிகளின் இயற்கை எதிரிகள் போன்ற காரணங்களால் ஒரு குறிப்பிட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற இயற்கை காரணங்களை மனிதனால் மாற்றி அமைக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.

காலநிலைகள் தொகு

பூச்சிக் கட்டுப்பாட்டிற்கான பல்வேறு முறைகளில், காலநிலைகள் மிகவும் முக்கியமானவைகளாகவும், சிறந்தவைகளாகவும் கருதப்படுகிறது. பூச்சிகள் கட்டுப்பாட்டிற்கான காலநிலை என்பது அதிக வெப்பம், காற்றின் ஈரப்பதம், பலத்த மழை மற்றும் பலத்த காற்று போன்றவையாகும்.

அதிக வெப்பம் தொகு

வெப்ப நிலையானது பூச்சிகளை நேரடியாகப் பாதித்து, அவை வெப்பத்தினால் அனேக பூச்சிகளை நேரடியாகக் கொல்லக்கூடியது.

காற்றின் ஈரப்பதம் தொகு

ஈரப்பதம் அதிகமாக உள்ள காலநிலை, பல பூச்சிகளுக்கு மிகவும் ஏற்றது. போதுமான அளவு மழையும், அதனால் ஏற்படும் மண்ணின் மிருதுத்தன்மையும் நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு, புகையிலை வெட்டுப்புழு போன்றவை மண்ணினுள் சென்று கூண்டுப்புழுவாக மாறுவதற்கும், கூண்டுப்புழுவிலிருந்து அந்தப்பூச்சி மண்ணுக்கு வெளியில் வரவும் அத்தியாவசியமானது.

பலத்த மழை தொகு

அதே சமயம் பலத்த மழை அசுவணிகள், இலைபேன்கள் போன்றவைகளை செடிகளிலிருந்து அடித்துச் சென்று அழிக்கக்கூடியது. நிலத்தில் நீர் தேங்கி நிற்கும்போதும் பல மண் வாழ் பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. மப்பும் மந்தாரமுமான காலநிலைகளும் அனேக பூச்சிகளின் செயல்பாடுகளையும், பரவுவதையும் வெகுவாக கட்டுப்படுத்துகிறது. 

பலத்த காற்று தொகு

பலத்த காற்றும் பூச்சிகளின் இனச்சேர்க்கை, முட்டையிடுதல் போன்றவற்றில் இடையூறு விளைவிப்பதோடு, பறக்கும் பூச்சிகளை கொல்லவும் கூடும். அதிக வெளிச்சமும் சில பூச்சிகளுக்கு பாதகமாகக் காணப்படுகிறது.