"அலன் போடர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,404 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
("== ஆலன் ராபர்ட் பார்டர் == க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
கிரிகெட் ஜாம்பவான்களில் குறிப்பிடத்தக்கவர் ஆலன் ராபர்ட் பார்டர்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் தனித்திறன் கொண்ட பேட்ஸ்மேன்
ஆவார். தங்கள் நாட்டு அணிக்கு பல ஆண்டுகள் கேப்டளாக இருந்து வழி நடத்ததி உள்ளார்.156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகள் படைத்துள்ளார். 273 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தொடர்ச்சியாக 153 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது இன்றளவும் முறியடிக்கப்படாத குறிப்பிடத்தக்க சாதனையாக பதிவாகி உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரத்து 174 ஓட்டங்களை குவித்துள்ளார்.இதில் 27 சதங்கள் அடங்கும். டெஸ்ட் வரலாற்றில் முதல்வீரராக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர் என்ற வரலாறு படைத்தார்.ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 150 ஓட்டங்களை முதன்முதலில் கடந்தவர் என்ற சிறப்பும் இவரையே சாரும்.
அவர் ஓய்வு பெறும் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் அதிக ஓட்டங்களை,அதிக சாதனைகளைப் படைத்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். 15 ஆண்டுகள் முறியடிக்க படாமல் இருந்த சாதனையை 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங் முறியடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
80

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2357000" இருந்து மீள்விக்கப்பட்டது