ஆப்பிள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
==ஆப்பிள் இரகங்கள்==
 
பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பல வித இரகங்கள் உள்ளன. ஆப்பிள் மரங்கள் பூக்க [[குளிர்]] அவசியமாதலால் பூமத்தியரேகைப்பகுதிகளில் இவை பூக்காது. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும். ஆப்பிள் கலப்பின விருத்தியில் பின்வரும் குணங்கள் மேம்படுத்தப்படுகின்றன: நிறமுள்ள வெளிப்புறம், கடினத்தோல் (rucheting; ருச்செடிங்) இல்லாமை, அதிக நாள் கெடாதிருத்தல், அதிக மகசூல், நோய் எதிர்ப்பு, நல்ல ஆப்பிள் வடிவம், நீளமான காம்பு (பழத்தின் மேற்புறம் பூச்சி மருந்து தெளிக்க வசதியாக) மற்றும் விரும்பப்படும் [[சுவைமணம்]].
 
முந்தைய இரகங்கள் பெரும்பாலும் வித்தியாசமான வடிவுமும், கடினத்தோலும், பல்வேறு நிறங்களும் கொண்டிருந்தன. இவற்றில் பல நல்ல சுவைமணம் கொண்டிருப்பினும் குறைந்த [[மகசூல்]], நோய் எதிர்ப்பின்மை போன்ற குணங்கள் இல்லாமலிருக்கும். இருப்பினும், இவற்றுள் சில இன்றும் மிகச்சில விவசாயிகளால் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பலப்பல வித்தியாசமான சுவைமணம் கொண்ட ஆப்பிள்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது