"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,004 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
==கூம்புச் சுரப்பி (Pineal Gland)==
இது, மூளைப்பகுதியிலுள்ள கார்பஸ் கலோசத்தின் அடியில் காணப்படுகிறது. இது கருப்புநிறமி (Melatonin) இயக்குநீரை உற்பத்திச் செய்கிறது. மார்புக் காம்பு, விதைப்பை போன்ற பகுதிகளில் நிறமிகளின் அடர்த்திக்கு இந்நிறமி முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
==கேடயச் சுரப்பி (Thyroid gland)==
கழுத்துப் பகுதியில் குரல்வளையின் இரண்டு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளைக் கொண்டு காணப்படும் அமைப்பிற்கு கேடயச் சுரப்பி என்றுபெயர். கேடயச் சுரப்பியக்குநீர் (Thyroxine) இங்குதான் சுரக்கிறது. இச்சுரப்பியக்குநீரில் அமினோ அமிலமும் அயோடினும் காணப்படுகின்றன. இச்சுரப்பியானது, உடல் வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிப்பதன் காரணமாக ஆளுமை இயக்குநீர் எனவும் குறிப்பிடப்பெறுகிறது.
 
===கேடயச் சுரப்பியக்குநீரின் பணிகள்===
கேடயச் சுரப்பியக்குநீர், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது. உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த துணைசெய்கிறது. திசு வளர்ச்சி மற்றும் மாறுபாடு அடைவதைத் தூண்டுகின்றது. மேலும், குருதியில் அயோடின் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்துகிறது. சிறுநீரகச் செயல்பாட்டையும், சிறுநீர்ப் போக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
 
===குறைபாடுகளால் உண்டாகும் விளைவுகள்===
====கேடயச் சுரப்புக்குறை நோய் (Hypothyroidism)====
கேடயச் சுரப்பியக்குநீரின் குறை சுரப்புக் காரணமாக, முன் கழுத்துக் கழலை, குறை வளர்சிதை மாற்றம், உடல் வளர்ச்சிக் குறை நோய் (Cretinism) முதலான குறைபாடுகள் ஏற்படுகின்றன.
# முன்கழுத்துக் கழலை : உணவில் அயோடின் பற்றாக்குறையால் இந்நோய் உண்டாகிறது. இதன் காரணமாக, கழுத்துப் பகுதியில் கேடயச் சுரப்பி வீங்கிக் காணப்படும்.
# மிக்சிடிமா என்றழைக்கப்படும் குறைவளர்சிதை மாற்றக் குறைபாடு பெரியவர்களுக்கு ஏற்படுகிறது. குறைந்த வளர்சிதை மாற்றவீதம், உடல், மநம் தரவுற்றுக் காணப்படுதல், எடை அதிகரிப்பு, தோல் கடினத்தன்மை, குறைவான இதயத்துடிப்பு, மனச்சோர்வு முதலான அறிகுறிகள் இக்குறைபாட்டால் நிகழ்கின்றன.
# உடல் வளர்ச்சிக் குறை நோய் : இது சிறியவர்களில் காணப்படும். இந்நோய் பாதிப்பினால் குள்ளத்தன்மை, மனவளர்ச்சிக் குறைபாடு, குறைபாடுடைய பற்கள், நாக்குத் துருத்துதல், தோல் தளர்வுத்தன்மை முதலிய அறிகுறிகள் உண்டாகும்.
 
====கேடயச்சுரப்பு மிகைநோய் (Hyperthyroidism)====
கேடயச் சுரப்பியக்குநீரின் மிகைச் சுரப்பினால், மிகையான வளர்சிதை மாற்றம், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, மிகுதியாக வியர்த்தல், எடை குறைவு, களைப்படைதல், கண்களில் பிதுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359625" இருந்து மீள்விக்கப்பட்டது