"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,307 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
===அண்ணீரக புறணி===
இதில் ஆல்டோஸ்டீரோன், கார்டிசோன் என்னும் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இவற்றுள், ஆல்டோஸ்டீரோன் நீர், சோடியம் மீண்டும் உரிஞ்சப்படுவதை ஊக்குவித்து பொட்டாசியம், பாசுபேட் அயனிகளைக் கழிவு நீக்கம் செய்கின்றது. தாது உப்புகளின் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிப்பு மேற்கொள்கிறது. மேலும், மின் பகுளிகளின் (Electrolytes) சமநிலை, உடல்திரவ அடர்த்தி. சவ்வூடு பரவல் அழுத்தம், இரத்த அழுத்தம் முதலியவற்றையும் இது பராமரிக்கிறது. கார்டிசோன் இயக்குநீர், கிளைக்கோசனைக் குளுக்கோசாகச் சிதைவடையச் செய்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. தவிர, அழற்சித் தடுப்பு வினைகளைத் தோற்றுவித்து நோய்த்தடைக் காப்புத் துலங்கலைக் கட்டுப்படுத்துகின்றது.
 
===அண்ணீரக அகணி===
இது, உருமாறிய நரம்புப் புறணியணுக்களால் ஆனது. அதிரனலின், இயலண்ணீரலின் என்கிற இருவகையான இயக்குநீர்களைச் சுரக்கின்றது. இவை ஆபத்துக் கால இயக்குநீர் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அழுத்தமான, அபாயகரமான சூழ்நிலைகளை உடல் விரைந்து எதிர்கொள்ள இவை துணைபுரிகின்றன. மேலும், இவை இதயத்துடிப்பு, சுவாசம், விழிப்புணர்வுத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கின்றன. அதுபோல், கண் பாவையை விரிவடையச் செய்கின்றன. மிகையான வியர்த்தல், முடி சிலிர்க்கச் செய்தல் போன்றவற்றையும் உண்டாக்குகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359743" இருந்து மீள்விக்கப்பட்டது