"திண்டுக்கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21,174 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
Tnse krishnamoorthi diet dgl (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2351089 இல்லாது ச...
(Tnse krishnamoorthi diet dgl (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2351089 இல்லாது ச...)
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = திண்டுக்கல்
|latd =10.5333 |longd =78.0667
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்= திண்டுக்கல்
|தலைவர் பதவிப்பெயர்= மாநகர தந்தை
|தலைவர் பெயர் = மருதராஜ்
|உயரம் =
|பரப்பளவு =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 1,96,955
|மக்களடர்த்தி =
|அஞ்சல் குறியீட்டு எண் = 624001
|வாகன பதிவு எண் வீச்சு = TN 57
|தொலைபேசி குறியீட்டு எண் = 0451
|இணையதளம்=www.municipality.tn.gov.in/dindigul/|}}
 
'''திண்டுக்கல்''' (''Dindigul'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ள]] ஒரு நகரமும் அதே பெயருடைய [[திண்டுக்கல் மாவட்டம்|மாவட்டத்தின்]] தலைநகரும் ஆகும். மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 நாள் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 48 மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.<ref>[http://www.maalaimalar.com/2014/02/20115514/marutharaj-will-sworn-tomorrow.html]</ref> ஹைதர் அலி காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை முதன்மையான இடமாக இருந்து வந்தது.
திண்டுக்கல்
அறிமுகம்
தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று திண்டுக்கல். ,இம்மாவட்டத்தின் தலைநகரம் திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டத்தில்; திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்காணல், ஆத்தூர் நிலக்கோட்டை, நத்தம் பகுதிகளைக் கொண்டுள்ளது. 15.09.1985,ல் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பல காலம் மதுரை மாவட்டத்துடன் ,இணைந்திருந்தது. ,இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும்.
அமைவிடம்
திண்டுக்கல் 100 05' வட அட்சரேகை முதல் 100 09' வட அட்சரேகை வரையிலும் 770 30' கிழக்குத் தீர்க்கரேகை முதல் 780 20' கிழக்குத் தீர்க்கரேகை வரை பரவியுள்ளது. ,ம்மாவட்டம் கடல்மட்டத்தில் ,இருந்து 268 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. ,இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ,இதன் தலைநகர் திண்டுக்கல். ,இது சிறுமலையின் அடிவாரத்தில் அமைந்து காணப்படுகிறது.
,இம்மாவட்டம் பல்வேறு வகையான நிலத்தோற்றத்தினை பெற்றுள்ளது. ,இங்கு மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பழனி மலையும், சிறுமலையும் மேலும் பல சிறுசிறு குன்றுகளும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் சமவெளி பகுதிகள் காணப்படுகின்றன. மருதாநதி, குடகனாறு, பாலாறு -பொருந்தலாறு, வருதமான ஆறு, குதிரை ஆறு, பரப்பலாறு போன்ற ஆறுகள் சமவெளிகளை ஏற்படுத்துகின்றன. மேலும் கோயமுத்தூர் பீட பூமியின் ஓரத்தில் அமைந்துள்ளதால் பீடபூமி பகுதியாகவும் ஒருசில ,டங்கள் காணப்படுகின்றன.
திண்டுக்கல்லின் எல்லைகள்
வடக்கு - ஈரோடு, கரூர்
கிழக்கு - சிவகங்கை, திருச்சி
தெற்கு - மதுரை
மேற்கு - தேனி, கோயமுத்தூர், திருப்பூர், கேரளா
,இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 6266.64 ச.கி.மீ. ஆகும்.
திண்டுக்கல் பெயர்க்காரணம்
திண்டுக்கல் என்பது எவ்வாறு பெயர் வந்தது என்றால், திண்டுக்கல்லில் உள்ள திண்டு என்றால் தலையணையைக் குறிக்கும். கல் என்றால் பாறை என்று பெயர். திண்டுக்கல் மத்தியில் தலையணை போன்ற கல் அமைந்து உள்ளதால் திண்டுக்கல் என்று பெயர் பெற்றது.
,இது பழனி மலைக்கும் சிறுமலைக்கும் ,டையே வளமான சமவெளிப் பகுதிகளைக் கொண்டு ,இருப்பதால் வேளாண்மை சிறந்த முறையில் ,இப்பகுதியில் நடைபெறுகிறது.
திண்டுக்கல் பிரியாணி புகழ்பெற்றதால் பிரியாணி நகரம் என்றும், பூட்டு நகரம் என்றும் ஜவுளி மற்றும் தோல் நகர் என்றும் அழைக்கப்படுகின்றது.
திண்டுக்கல்லின் வரலாறு
திண்டுக்கல் மாவட்டம் ஆரம்ப காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி எல்லைக்குள் உட்பட்டு ,இருந்தது. சேர அரசன் தர்ம பாலன்தான் திண்டுக்கல்லில் உள்ள புகழ் வாய்ந்த அபிராமி அம்மன் கோயிலையும் பத்மஸ்ரீ கோயிலையும் கட்டினார்.; திண்டுக்கல் மதுரையின் வடக்கு எல்லையாக ,இருந்ததாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
கி.பி. 20,ல் ஸ்ரபோ என்ற வரலாற்று ஆசிரியர் பாண்டிய எல்லைக்கு உட்பட்டிருந்த திண்டுக்கல்லைப் பற்றி தன்னுடைய வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார். கி.பி. 1ஆம் நூற்றாண்டில் கரிகால் சோழன் (மதுரையினை) பாண்டிய நாட்டினைக் கைப்பற்றி சோழ ஆட்சியினை நிறுவினார். ,இதனால் திண்டுக்கல் சோழ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் தென் ,இந்தியா முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். அதனால் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை திண்டுக்கல்லை ஆட்சி செய்தனர். பல்லவருக்குப் பின் மீண்டும் சோழர்களும் அவர்களை அடுத்து முகலாயர்கள் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல்லைக் கைப்பற்றினர். ,தன் பின்னர் விஜய நகர பேரரசின் கீழும் திண்டுக்கல் வந்தது. கி.பி.1559,ல் நாயக்கர்கள் ,ந்தியாவில் பலம் வாய்ந்தவர்களாக மாறினர். முத்து கிருஷண நாயக்கர் என்பவர் கி.பி. 1563,ல் ஆட்சிக்கு வந்தார். ,இவர்தான் கி.பி.1602,ல் திண்டுக்கல் மலையின் மேல் திண்டுக்கல் மலைக் கோட்டையினையும் மலையின் அடிவாரத்தில் ஒரு கோட்டையையும் கட்டினார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு அங்குள்ள கோட்டையைச் சுற்றி அமைந்துள்ளது. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் திண்டுக்கல் கோட்டை மராட்டியர்கள் மற்றும் ஹைதர் அலியின் படைக்களமாக விளங்கியது. 1767, 1783, 1790 வருடங்களில் மூன்று முறை ஆங்கிலேயர்கள் ,இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். பின்னர் ஹைதர் அலியிடம் கோட்டையை ஆங்கிலேயர்கள் திருப்பித் தந்தனர். ,இங்கு முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களின் தொகை அதிகமாகவே ,இருந்தது.
,இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்தது. 15.09.1985ஆம் நாள் முதல் ,இது தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது. திண்டுக்கல் 1989 மார்ச் 27,ல் திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1991 ஜீலை 18,ல் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1997 ஜீலை முதல் திண்டுக்கல் மாவட்டம் எனப் பெயர் பெற்றது. நகராட்சியான திண்டுக்கல் 21.02.2014 முதல் மாநகராட்சியாக தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் மேயர் பொறுப்பை திரு. ஏ. மருதராஜ் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புகள்
மராட்டிய மன்னர் ஹைதர் அலி திண்டுக்கல்லில் உள்ள 18 பாளையங்களை சிதறாமல் ,இணைக்க அனுப்பப்பட்டார். ஹைதர்அலி காலத்தில் புர்சானா மிர்சாகிப் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது மனைவி அமீர்-உம்-நிசா-பேகம் நினைவாகக் கட்டப்பட்ட சமாதி மற்றும் ,இதர குடியிருப்புகள் தற்பொழுது பேகம்பூர் என அழைக்கப்படுகிறது. ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் போன்ற முஸ்லீம் ஆட்சியாளர்களாலும், ஆங்கிலேயர்களாலும் பல ஆண்டுகள் திண்டுக்கல் நிர்வகிக்கப்பட்டதன் காரணமாக ,இந்த ,இடங்களில் ,இஸ்லாமியர்களும்; கிறிஸ்தவர்களும் அதிகமாக வாழ்கின்றனர். திண்டுக்கல் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் அவர்களின் நவீன ஆயுதக் கிடங்காக ,இருந்தது. தமிழக அரசு மாவீரன் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி நினைவு மண்டபங்கள் கட்ட ஆணைப் பிறப்பித்துள்ளது.
 
== மக்கள் தொகையியல்==
திண்டுக்கல் மலைக் கோட்டை
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 19,23,014 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 12,49,762 மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 6,73,252 வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 9,68,137 ஆண்களும் 9,54,877 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6266.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 306 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி [[படிப்பறிவு]] உடையவர்கள் 11,81,746 ஆகவும், அதில் ஆண்கள் 6,81,698 ஆகவும்; பெண்கள் 5,00,048 ஆகவும் உள்ளனர்.
18ஆம் நூற்றாண்டில் மைசூர் மகாராஜா (சுல்தான்கள்) திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். திப்பு மற்றும் ஹைதர் அலி காலத்தில் திண்டுக்கல் கோட்டை முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. 1799,ல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி மலைக்கோட்டையைக் கைப்பற்றியது. ,இக்கோட்டையின் மேல் கைவிடப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. 'தேவாரம்,' அப்பர் பாடிய பாடல்களில் திண்டுக்கல் பற்றியப் பாடல்கள் ,இடம்பெற்றுள்ளன.
<ref>[http://dindigul.tn.nic.in/DHB2010-11.pdf District Staticstical Hand Book 2001 - 2011] </ref>
<ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/25-Dindigul.pdf DINDIGUL DISTRICT]</ref>
பத்மகிரி நாதர் எழுதிய 'தென்றல் விடு தூது' நூலிலும் திண்டுக்கல்லைப் பற்றி உள்ளது. ரு.ஏ. சாமிநாத ஐயர் (1855 - 1942) 'தென்றல் விடு தூது' போன்றவற்றில் உள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லின் பழைய பெயர் திண்டிச்சரம் என அழைக்கப்பட்டது.
மலைக்கோட்டையின் உயரம் 270மீ.(900அடி), சுற்றளவு 2.75கி.மீ. (1.71 மைல்). மலைக்கோட்டையில் உள்ள பீரங்கி 17ஆம் நூற்றாண்டில் பொருத்தப்பட்டது. கோட்டையின் சுற்று சுவர் ,இரட்டை சுவர் அமைப்பு முறையில் கட்டப்பட்டது. ,இது மிகவும் பாதுகாப்பாகவும் காற்றோட்ட வசதி உடையதாகவும் காணப்படுகிறது. கோட்டை சுவரில்; அவசர காலத்தில் போரின் போது காவலர்கள் தப்பிக்க மெல்லிய சுவர் ஒன்று கட்டப்பட்டு ,இருந்தது. மேல் கூறையில் பெய்யும் மழை கோட்டைக்குள் விழாமல் வெளியேறிவிடும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மலைக்கோட்டையில் 48 அறைகள் இருந்தன, போர்க்கருவிகள் வைக்கும் அறை, கைதிகள் அறை, அடிமைகள் அறை, விசாலமான சமையல் அறை, குதிரை லாயம், மற்றும் சந்திப்புக் கூடாரம் போன்றவையும் மழைநீர் சேமிப்புக் குட்டைகளும் காணப்படுகின்றன.
 
===மொழிகள்===
மேற்கோள் நூல்கள்
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியான [[தமிழ் மொழி|தமிழ் மொழியுடன்]],[[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிரம்]], [[உருது மொழி|உருது]] மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன.
1. பத்மகிரி நாதர்,, திண்டுக்கல், அபிராமி பதிப்பகம்
 
==பெயர்க் காரணம்==
2. ரு.ஏ. சாமிநாத ஐயர் (1942) 'தென்றல் விடு தூது' அபிராமி பதிப்பகம்
*காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’ என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி [[தவம்]] புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, [[ஈஸ்வரன்]] அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.
*'திண்டு’ அதாவது ‘தலையணை’ போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும் மற்றும் மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதாலும் 'திண்டு’ , ‘கல்’ ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது. அதாவது நகரத்தை நோக்கி காணப்படும் வெறுமையான மலைகளை இது குறிக்கும் விதத்தில் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
== வரலாறு ==
[[படிமம்:24Dindigul.jpg|left|thumb|திண்டுக்கல் மலைக்கோட்டையின் 19 ஆம் நூற்றாண்டு புகைப்படம்]]
திண்டுக்கல் தொன்று தொட்டு [[பாண்டியர்]] ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக [[விஜயநகரப் பேரரசு|விஜய நகர ஆட்சி]]யில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. [[நாயக்கர்|நாயக்க]] மன்னர்கள், [[ஆற்காடு நவாப்|ஆர்க்காட்டு நவாபுகள்]], மைசூர் மன்னர்கள், [[ஆங்கிலேயர்]] ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.[[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] தந்தை [[ஹைதர் அலி]]யின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று .
 
== மலைக்கோட்டை ==
[[படிமம்:Dindigul fort.jpg|thumb|250pxl|right|திண்டுக்கல் மலைக்கோட்டையின் முன் பகுதி]]
[[படிமம்:Dindigul fort temple.jpg|thumb|250pxl|right|திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலின் முன்பகுதி]]
 
[[ஆங்கிலேயர்]]களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில் தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் [[திருமலை நாயக்கர்]] இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், [[ஹைதர் அலி]] போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். கி.பி.1784ல் [[திப்பு சுல்தான்]] இங்கு வந்துள்ளார். கி.பி.1788ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த [[பாளையக்காரர்கள்|பாளையக்காரர்களை]] அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த [[கோபால் நாயக்கர்|கோபால் நாயக்கரும்]], அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4ல் கைது செய்து, நவ.,5ல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன.[[மதுரை]]யை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790ல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம்தான் இது.
 
== மலைக்கோட்டை கோவில் ==
திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
 
== திண்டுக்கல் மாநகராட்சி ==
{{main|திண்டுக்கல் மாநகராட்சி}}
திண்டுக்கல் மாநகராட்சி [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மாவட்டமான திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சியாகும். மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.<ref>http://www.maalaimalar.com/2014/02/20115514/marutharaj-will-sworn-tomorrow.html</ref>
 
== முக்கிய வழிபாட்டு தலங்கள் ==
[[File:Dindigul.cvs.jpg|thumb|400px|திண்டுக்கல் மாநகரம்]]
=== அபிராமி அம்மன் கோவில் ===
திண்டுக்கல்லில் முன்பிருந்தே ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. {{cn}} திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராமாம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர் . இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.
 
=== கோட்டை மாரியம்மன் ===
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.<ref>[http://temple.dinamalar.com/New.php?id=789]</ref>
 
=== பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ===
[[பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்]] [[ஹைதர் அலி]] ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி [[பேகம்பூர்]] என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.<ref>[http://tamil.nativeplanet.com/dindigul/attractions/begambur-big-mosque/]</ref>
 
=== புனித ஜோஸப் தேவாலயம் ===
1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.<ref>[http://tamil.nativeplanet.com/dindigul/attractions/st-joseph-church/]</ref>
 
==முக்கியத் தொழில்கள்==
=== பூட்டு ===
திண்டுக்கல் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது பூட்டு. யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது.{{cn}}
 
=== திண்டுக்கல் பூ வணிக மையம் ===
திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமிழ்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.
 
===தோல் தொழிற்சாலைகள்===
திண்டுக்கல் நகரில் பேகம்பூர்,நாகல்நகர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, தொழில்பேட்டை, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன.திண்டுக்கல் தோல்கள் பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.பின், சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில்,மாட்டுத் தோல்களை விட ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition_madurai/dindigul/2013/08/18/அடையாளங்களைஇழந்துவரும்-தி/article1739794.ece?service=print| title= அடையாளங்களைஇழந்துவரும் திண்டுக்கல் | publisher=தினமணி | accessdate=18 ஆகஸ்ட் 2013}}</ref>.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=866588&Print=1| title=வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சந்தையில் ஆட்டுத்தோல் கொள்முதல் | publisher=தினமலர் | accessdate=7 டிசம்பர் 2013}}</ref>
 
== இலக்கியச்சிறப்பு ==
திண்டுக்கல் நகரில் உள்ள பத்மகிரீசர் மீது பலபட்டடை சொக்கநாதர் எனும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் "பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது" எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றியுள்ளார்.
 
== ஆன்மீகச்சிறப்பு ==
திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி அருளாளர்கள் பலர் இருந்துள்ளனர். ஓதச்சாமியார் எனும் சித்தர் அவ்வாறு மலைக்கோட்டையை ஒட்டிய குகையில் இருந்து அருள் புரிந்துள்ளார். பகவான் ரமணர் கூட திண்டுக்கல்லில் சில காலம் வசித்துள்ளார்.
 
==முக்கிய இடங்கள் ==
===திண்டுக்கல் மணிகூண்டு===
திண்டுக்கல் மணிகூண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டது.இது திண்டுக்கல் நகரின் மையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது.கோபுர தூணின் உச்சியில் கண்ணாடிப் பேழைக்குள் நான்கு புறமும் கடிகாரம் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு பயன் படுகிறது.அரசியல் கடசிகளின் பொதுக் கூட்டங்கள் இதன் அருகில்தான் நடைபெறும்.
 
===திப்பு சுல்தான் மணிமண்டபம்===
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த [[ஹைதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கி.பி.2014 ல் அறிவித்தது.அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் [[பேகம்பூர்]] , அரண்மனை குளம் பகுதியில் உள்ள [[தமிழ்நாடு வக்பு வாரியம்| தமிழ்நாடு வக்பு வாரியத்தின்]] இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
<ref>{{cite web | url=http://www.jayanewslive.com/tamilnadu/chife-miniter-jayalalitha-secretariat-manimandapam_3039.html | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=jayanewslive| accessdate=23 டிசம்பர் 2014}}</ref>.<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/12/23/திண்டுக்கல்-அரண்மனை-குளம்-ப/article2583979.ece | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=தினமணி | accessdate=23 டிசம்பர் 2014}}</ref>
===கோபால் நாயக்கர் மணிமண்டபம்===
[[படிமம்:Gopal-5.jpeg|thumb|right|250px|கோபால நாயக்கர் மணிமண்டபம்]]
ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி [[வேலு நாச்சியார்]]க்கும், [[ஊமைத்துரை]]க்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , தூந்தாசிவாக் , [[திப்பு சுல்தான்]] என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட [[விருப்பாச்சி கோபால் நாயக்கர்]] அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் -பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது<ref> http://www.hindu.com/2010/12/11/stories/2010121154920600.htm</ref> <ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3557002.ece</ref> <ref>http://dinamani.com/edition_chennai/chennai/article1472572.ece</ref>.
 
===குமரன் பூங்கா===
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா உள்ளது. சுமார் 3½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, கடந்த 1952–ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், அலங்கார நுழைவுவாயில்,பறவை,விலங்கு கூடங்கள், சிற்றுண்டி உணவகம் உள்ளிட்டவை உள்ளன.<ref>{{cite web |url=http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2016/04/10233515/For-a-year--Unfinished-work--Kottaikulam-boating-program.vpf| title=திண்டுக்கல் குமரன் பூங்கா சிறுவர்–சிறுமிகள் உற்சாகம் | publisher=தினத் தந்தி | accessdate=17 பிப்ரவரி 2015}}</ref>
 
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
*[[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] ([[வாரணாசி]]-[[பெங்களூரு]]-[[திண்டுக்கல்]]-[[மதுரை]]-[[கன்னியாகுமரி]])
*[[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45]] ([[சென்னை ]]-[[விழுப்புரம்]]-[[திருச்சிராப்பள்ளி]]-[[திண்டுக்கல்]]-[[தேனி]])
*[[தேசிய நெடுஞ்சாலை 209 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 209]] ( [[கொள்ளேகால்]] - [[சாமராஜநகர்]] - [[பண்ணாரி]] - [[சத்தியமங்கலம்]] - [[கோயம்புத்தூர்]] - [[பொள்ளாச்சி]] - [[பழனி]] - [[திண்டுக்கல்]])
ஆகியவை திண்டுக்கல் வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்
 
===இரயில் நிலையம் ===
திண்டுக்கல் இரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. வாராந்திர இரயில்கள் உட்பட 86 இரயில்கள் தினமும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. பெங்களூரு, கோல்கட்டா, புதுடில்லி, மும்பை நகரங்களுக்கு செல்ல ரயில் வசதி உள்ளது.
<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1070869&Print=1 | title=மலைக்கோட்டையின் கம்பீரத்தை பிரதிபலிக்கும் திண்டுக்கல் | publisher=தினமலர் | accessdate=15 செப்டம்பர் 2014}}</ref>
 
==கல்வி நிறுவனங்கள் ==
===கல்லூரிகள் ===
====பொறியியல்====
# பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9213)
# ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9215,9214)
# எஸ்.பி.எம்.பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9216)
# அண்ணா பல்கலைக்கழகம், திண்டுக்கல் வளாகம்.(கலந்தாய்வு எண்.9223)
# எஸ்.எஸ்.எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9221)
# ஜெய்னி பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9236).<ref name=din>{{cite web | url=http://www.dinamani.com/education/colleges/article923067.ece| title=திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்| publisher=தினமணி | accessdate=11 ஏப்ரல் 2010 }}</ref>
 
====கலையும் அறிவியலும்====
#ஜி.டி.என்.கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
#எம்.வி. முத்தையா மகளிர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
#பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
#ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
#ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.
#மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.
#பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.
#பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
 
====செவிலியர் கல்லூரி====
#கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
#ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
#சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
 
====பாலிடெக்னிக் கல்லூரி====
#ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.
#எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.
#இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
#ABC பாலிடெக்னிக் கல்லூரி,
<ref>{{cite web | url=http://www.dinamani.com/education/colleges/article923067.ece. | title=திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் | publisher=தினமணி | accessdate=11 ஏப்ரல் 2010 }}</ref>
 
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://usetamil.forumotion.com/-f35/-dindigul-fort-t3699.htm திண்டுக்கல் கோட்டை தகவல்]
*[http://tamilkudumbam.com/component/search/திண்டுக்கல்%20தேங்காய்.html?ordering=&searchphrase=all திண்டுக்கல் சமையல் ஸ்டப் பை ஸ்டப் போட்டோவுடன்]
 
{{தமிழ்நாடு}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்}}
{{திண்டுக்கல் மாவட்டம்}}
[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]
[[பகுப்பு:திண்டுக்கல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2362348" இருந்து மீள்விக்கப்பட்டது