சிமோன் த பொவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 25:
 
15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக [[பாரிஸ் பல்கலைக்கழகம்]] சென்றார். அங்கே அவர் [[இழான் பவுல் சார்த்ர]] உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.
 
==கல்வி==
பொவார், தம் தந்தையின் ஊக்கம் காரணமாக, அறிவுக் கூர்மை மிக்கவராகத் திகழ்ந்தார். சிமோன் ஒரு மனிதனைப் போல் தன்னைக் கருதிக் கொள்கின்றாள் என்று அவரது தந்தை பெருமைப்படக் கூறுவார். குடும்பத்தில் காணப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளினால், தனக்கான வரதட்சணையினை அடைவதற்கு தன் வயதையொத்த ஏனைய மத்தியத் தர வர்க்க பெண்களைப்போல் காத்திருக்க விரும்பாததால், திருமண வாய்ப்புகள் சிக்கலில் அமைந்தன. பொவார் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். தனக்குப் பிடித்த செயல்களைச் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, தன் வாழ்க்கைக்குரிய பொருளை ஈட்டுவதில் முனைப்புக் காட்டினார்.
 
கி. பி. 1925 இல் கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் இளங்கலைத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றார். அதன்பிறகு, பிரான்சில் உள்ள கத்தோலிக்க த பாரீசு மற்றும் செயின்ட் மேரி கல்வி நிறுவனங்களில் முறையே கணிதம் மற்றும் இலக்கியம்/ மொழியியல் உள்ளிட்டப் பாடங்களைப் பயின்றார். மேலும், பாரீசு பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தார். 1928 ஆம் ஆண்டு தன பட்டப்படிப்பை முடித்தபின், முதுகலைப் பட்டப்படிப்பிற்கு இணையான லேய்ப்னிசின் கருத்து குறித்து ஓர் ஆய்வறிக்கையைச் சமர்பித்தார். சொபொனில் (Sorbonne) உள்ள பாரீசு பல்கலைகழகமானது, பொவார் பயின்ற அண்மைக்காலத்தில்தான் பெண்களுக்கு உயர்கல்வியினை வழங்கியிருந்தது. அங்குப் பட்டம்பெற்ற ஒன்பதாவது நபராகப் பொவார் இருந்தார்.
 
சிமோன் த பொவார் முதன்முதலாக, மாரிஸ் மெர்லியோ போன்தி (Maurice Merleau-Ponty), கிளாத் லெவி ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) ஆகியோருடன் பணிபுரிந்தார். அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துகொள்ளாது போனாலும், அவர் தத்துவத்திலுள்ள விவசாயப் பாடத்திட்டங்களான எகோல் நார்மலே சுபீரியர் (École Normale Supérieure) பற்றி எடுத்துரைக்கலானார். அப்பாடத்திட்டம், உயர் முதுகலைப் பட்டப்படிப்பிற்குரிய தேர்வு தேசிய தரவரிசை மாணவர்களுக்கு உறுதுணையாக விளங்கியது.
 
==இரண்டாம் பாலினம்==
"https://ta.wikipedia.org/wiki/சிமோன்_த_பொவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது