சிமோன் த பொவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 31:
கி. பி. 1925 இல் கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் இளங்கலைத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றார். அதன்பிறகு, பிரான்சில் உள்ள கத்தோலிக்க த பாரீசு மற்றும் செயின்ட் மேரி கல்வி நிறுவனங்களில் முறையே கணிதம் மற்றும் இலக்கியம்/ மொழியியல் உள்ளிட்டப் பாடங்களைப் பயின்றார். மேலும், பாரீசு பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தார். 1928 ஆம் ஆண்டு தன பட்டப்படிப்பை முடித்தபின், முதுகலைப் பட்டப்படிப்பிற்கு இணையான லேய்ப்னிசின் கருத்து குறித்து ஓர் ஆய்வறிக்கையைச் சமர்பித்தார். சொபொனில் (Sorbonne) உள்ள பாரீசு பல்கலைகழகமானது, பொவார் பயின்ற அண்மைக்காலத்தில்தான் பெண்களுக்கு உயர்கல்வியினை வழங்கியிருந்தது. அங்குப் பட்டம்பெற்ற ஒன்பதாவது நபராகப் பொவார் இருந்தார்.
 
சிமோன் த பொவார் முதன்முதலாக, மாரிஸ் மெர்லியோ போன்தி (Maurice Merleau-Ponty), கிளாத் லெவி ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) ஆகியோருடன் பணிபுரிந்தார். அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துகொள்ளாது போனாலும், அவர் தத்துவத்திலுள்ள விவசாயப் பாடத்திட்டங்களான எகோல் நார்மலே சுபீரியர் (École Normale Supérieure) பற்றி எடுத்துரைக்கலானார். அப்பாடத்திட்டம், உயர் முதுகலைப் பட்டப்படிப்பிற்குரிய தேர்வு தேசிய தரவரிசை மாணவர்களுக்கு உறுதுணையாக விளங்கியது. 1929 முதற்கொண்டு 1943 வரை இவர் லீசி எனும் உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டுவந்தார்.
 
==திருமண வாழ்க்கை==
அக்டோபர் 1929 இல், ஜீன் பால் சார்த் (Jean-Paul Sartre) என்பவர், பொவாரது தந்தையைச் சந்தித்து, அவரைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தினார். பின், இருவரும் தம்பதியராகக் காணப்பட்டனர். ஒருநாள் பாரீசின் முதன்மையான அருங்காட்சியகமான லோவ்ரி (Louvre) யின் வெளிப்புற இருக்கையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது, பால் சார்த் பொவாரிடம், இரண்டாண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமாய் பணித்தார். அவருடைய திருமண வாழ்க்கை முடியும் தருவாயில் இருந்தது. அப்போது அவர், ''திருமண வாழ்க்கை இனி சாத்தியமில்லை; ஏனெனில், என்னிடம் கொடுக்க வரதட்சணை இல்லை'' என்று கூறினார். ஆனாலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நட்புக் கொண்டிருந்தனர். அதன்பின், அவர் திருமணம் பற்றிய எண்ணத்தைக் கைவிட்டார். மேலும், சார்த்துடன் இணைந்து வாழும் போக்கையும் நிராகரித்தார். பொவாருக்குக் குழந்தைகள் கிடையாது. இதன்காரணமாக, அவர் மேம்பட்ட கல்விப் பட்டப்படிப்புகள் பெற முடிந்தது. மேலும், அரசியல் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொளளவும், பயணம் மேற்கொண்டிடவும், எழுத்துப்பணியில் உழைத்திடவும், கற்பித்தலைத் தொடர்ந்திடவும் அவருக்குப் போதிய நேரமிருந்தது. இதுதவிர, ஆண், பெண் இருபாலரின் அன்பைப் பெற முடிந்தது. அதோடுமட்டுமின்றி, அவர்களுடன் அடிக்கடி கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருந்தது.
 
சார்த் மற்றும் பொவார் இருவரும் மற்றவரின் படைப்புகள் குறித்து எப்பொழுதும் வாசித்து வந்தனர். சார்த்தின் இருப்பும் இன்மையும் (Being and Nothingness), பொவாரின் அவள் வசிக்க வந்தாள் (She Came to Stay), தொடர்பின்மை ஆய்வும் குறிக்கோளும் (Phenomenology and Intent) ஆகிய இருத்தலியல் படைப்புகள் குறித்து ஒருவருக்கொருவர் விவாதம் மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இருப்பினும், சார்த்தின் தாக்கத்தைத் தாண்டி, எகல் மற்றும் லேபினீசு (Hegel and Leibniz) ஆகியோரின் தாக்கங்களை உள்ளடக்கியதாக பொவாரின் அண்மையப் படைப்புகள் இருந்தன. 1930 களில் நவீன எகலிய மறுமலர்ச்சிக்கு அலெக்சாண்டர் கோவே மற்றும் ஜீன் ஹிப்போலிட் (Alexandre Kojève and Jean Hyppolite) ஆகியோர் தலைமையேற்றனர். இது ஒட்டுமொத்த பிரெஞ்சு சிந்தனையாளர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. பொவார் மற்றும் சார்த் ஆகியோரையும் இது விட்டுவைக்கவில்லை. எகலின் ஆன்ம தரிசனத்தை இருவரும் அறியத் தலைப்பட்டனர்.
==இரண்டாம் பாலினம்==
சிமோன் த பொவார் கி. பி. 1949 இல் '''இரண்டாம் பாலினம்''' (The Second Sex) என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.<ref>முனைவர் தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, ப. 182.</ref> இந்நூலில், ''இவர் பெண் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள்,'' என்று கூறியுள்ளார். இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் என்னும் கருத்தியலானது, ஓர் அறிவுசார் கோட்பாடாகவும் செயல்பாடுகளுக்கான கருவியாகவும் மாற்றம் பெற்றது.<ref>http://webcache.googleusercontent.com/search?q=cache:http://www.tamilvu.org/courses/diploma/d071/d0714/html/d0714441.htm&gws_rd=cr&ei=zr9gWbutBMWm0ASy0bbYCA</ref> மேலும், இந்நூல் பெண் விடுதலைக்கான அடிப்படை சாசனமாகத் திகழ்ந்து வருகிறது.<ref>http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=1534&id1=77&issue=20140614</ref> தாய், மனைவி என்னும் நிலைப்பாடுகள் மூலமாக குடும்பம் அமைப்பு எவ்வாறு பெண்ணைக் கட்டுப்படுத்துவனவாக உள்ளன என்பது பற்றி பொவார் இதில் குறிப்பிட்டுள்ளார்.<ref>http://andhimazhai.com/news/view/seo-title-10941.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிமோன்_த_பொவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது