எர்மான் எமில் பிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...
வரிசை 37:
 
இந்த தொடக்கத்தைக் கொண்டு அவர் டைபெப்டைடுகள், டிரை பெப்டைடுகள், பிறகு பாலிபெப்டைடுகள் ஆகியவற்றை உருவாக்கினார். 1901 ஆம் ஆண்டில் எர்னெசுட்டு போர்னியு உடன் இணைந்து கூட்டாக கிளைசைல்கிளைசின் என்ற டைபெப்டைடைக் கண்டுபிடித்தார். அதே ஆண்டில் அவர் கேசினை நீராற்பகுப்பு செய்வது தொடர்பான தனது ஆய்வு முடிவையும் வெளியிட்டார். இயற்கையில் கிடைக்கும் அமினோ அமிலங்கள் ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டன மற்றும் புதியவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவருடைய ஓலிகோபெப்டைடுகள் தொகுப்பு முறை ஆக்டோடெகாபெப்டைடு உருவாக்கப்பட்ட போது உச்சத்தைத் தொட்டது எனலாம். இந்த ஆக்டோடெகாபெப்டைடு இயற்கை புரதங்களின் பல பண்பியல்புகளைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வு மற்றும் அவரின் தொடர்ச்சியான ஆய்வுகள் புரதங்களைப் பற்றிய சிறப்பான புரிதலுக்கும், புரதங்கள் தொடர்பான கூடுதல் ஆய்வுகளுக்கும் வித்திட்டன எனலாம்.
 
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட பணிகளை விடக் கூடுதலாக, பிசர், [[இலைக்கன்]] எனும் வகைத் தாவரத்தில் காணப்டும் [[நொதியம்|நொதியங்கள்]] மற்றும் வேதிப்பொருட்கள் குறித்தும், [[தோல் பதனிடுதல்|தோல் பதனிடுதலில்]] பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். தனது வாழ்வின் இறுதி நாட்களில் [[கொழுப்பு]]கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1890 ஆம் ஆண்டில், வினைவேதிமம் (substrate) மற்றும் நொதியம் (enzyme) இவற்றுக்கிடையேயான இடைவினையைக் கண்ணுறுவதற்கான ”பூட்டு-சாவி மாதிரி” என்ற கருத்தியலை முன்மொழிந்தார். இருப்பினும், நொதியங்களின் வினைகளில் இந்தக் கொள்கையை இதற்குப் பின் வந்த ஆய்வுகள் ஆதரிக்கவில்லை.
 
பிசர் (+) குளுகோசு மற்றும் பியூரின் ஆகியவற்றின் கரிமத் தொகுப்பு முறைகளைக் கண்டறிந்தது, கேபைனைத் தயாரிப்பதற்கான முதல் தொகுப்பு முறையைக் கண்டறிந்தது என்று பல பணிகளைக் கண்டறிந்தாலும் சர்க்கரைகள் குறித்த இவரது ஆய்வுப்பணிக்காக மிகவும் குறிப்பிடப்படுகிறார். <ref>{{cite journal | title = Synthese des Traubenzuckers | pages = 799–805 | first = Emil | last = Fischer | doi = 10.1002/cber.189002301126 | journal = Berichte der deutschen chemischen Gesellschaft | year = 1890 | volume = 23}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எர்மான்_எமில்_பிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது