மெய்ஞானபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
| website =
| footnotes = }}
 
=மெய்ஞானபுரம்=
மெய்ஞானபுரம் (நெடுவிளை) தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்குப் பகுதியில், சாத்தான்குளத்திலிருந்து 10கி.மீ தூரத்திலும், நாசரேத்திலிருந்து 11 கி.மீ தெற்கிலும் அமைந்துள்ளது. இது மெய்ஞானபுரம் என்று அழைக்கப்படுகிறது. உடன்குடி இதன் அருகில் உள்ள நகரமாகும். இதன் அருகில் நாசரேத் நிலையம் அமையப்பெற்றுள்ளது. இது தூத்துக்குடி விமான நிலையத்தின் மூலம் சேவை பெறுகிறது. சாலை போக்குவரத்தின் வாயிலாக திருநெல்வேலி (41கிமீ வடகிழக்கு), தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு செல்ல்லாம்.
==மதம்==
இந்தியாவில் உள்ள தேவாலயங்களில் நேர்தியாக கட்டப்பட்ட தேவாலயங்களில் தூய பவுலின் ஆலயம், மெய்ஞானபுரமும் ஒன்றாகும். அருள்திரு. சி.டி.இ. ரெனிஸின் செல்வாக்கின் கீழ் மெய்ஞானபுரம் வந்த்து. மார்ச் 7, 1830ஆம் ஆண்டு அருள்திரு. ரெனியஸ் அவர்கள் நெடுவிளை என பெயர் பெற்ற இக்கிராமத்தை மெய்ஞானபுரம் (உண்மை ஞானம்) என பெயர் மாற்றினார்.
அருள்திரு. ஜான் தாமஸ், 1837இல் இக்கிராமத்தை வந்தடைந்தார். அவர் இக்கிராமத்தை மிகவும் நேசித்து, ஆலயத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்தார். இது திருநெல்வேலிக்கு சுற்றுலா வரும் அனைவரையும் கவரக் கூடிய இடமாக காணப்படுகிறது. 192 அடி உயரமுள்ள இதன் கோபுரம் 1868ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோபுர கட்டுமானத்திற்கான அஸ்திபார கல் லாட் நெபியாரால் நிறுவப்பட்டது. அருள் திரு ஜான் தாமஸ் மரித்து இவ்வாலயத்தின் அருகிலே அடக்கம் செய்யப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத்த்தின் கடைசி வியாழக்கிழமை அசனப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இக்கிராம மக்கள் ஆலய பிரதிஸ்டை பண்டிகையை தூய பவுலின் நினைவாக கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் போது இக்கிராம மக்களின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளுகின்றனர். அந்நேரத்தில் அதிக அளவிளான உணவு (அசனம்) தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அசனப் பண்டிகை தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.
இக்கிராமத்தின் 5 கிலோ மீட்டர் தூரத்தில் முத்துலெட்சுமிபுரத்தி உள்ள அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா அனவைராலும் கொண்டாடப்படுகிறது.
==காலநிலை==
மழைக்காலம் மற்றும் குளிர்காலம் (செப்டம்பர் - ஜனவரி) காலநிலை இதமாக உணரப்படுகிறது. கோடைகாலத்தில் மிகவும் வெப்பமாகயிருக்கும். இக்கிராம்ம் மன்னர் வளைகுடாவிலிருந்து 5கி.மீ தொலைவில் அமையப்பெற்றதால், மாலையில் இதமான காற்று ஆண்டு முழுவதும் வீசுகின்றது.
==பொருளாதாரம்==
இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரம் வேளாண்மை ஆகும். மேற்கு ஏக்க நீர் பாசனம் (சாந்தநேரி கால்வாய்) நீர்ப்பாசனத்திற்கு ஒரே ஆதாரம் ஆகும். செம்மறிகுளம் விவசாயிகள், சதாரணியில் ஏரிக்கு வரும் கால்வாய் மறித்து சட்டவிரோதமாக சாகுபடி செய்வதால், சதாரணி ஏரி எப்பொழுதும் வறண்டே காணப்படுகிறது. பல ஆண்டுகள் பருவமழை பொய்த்து போனதால் மக்கள் பலர் மளிகை வியாபாரத்திற்காக நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். கல்வி கற்பதற்கான சூழல் இருப்பதால் இளம் தலைமுறையினர் உலகம் முழுவதும் சென்ற பல நல்ல வேலைகளில் உள்ளனர். இக்கிராமத்தில் உள்ள சமையல்கார்ர்கள் சென்னை மற்றும் கோயம்புத் தூரில் சென்று திறன்பட செயல்படுகிறார்கள். இளம் தலைமுறையினர் ஆங்கில அறிவை பெற்று ஆசிரியர்களாக்கும் மற்றும் சீருடை பணியிலும் பணியாற்றுகின்றனர்.
==கிராம மற்றும் ஆலய வரலாறு==
இக்கிராம பூசாரியின் மகன் பாம்பினால் கடிப்பட்டு துன்புற்றார். சி.டி.இ. ரேனியஸ் (1790-1838) அவர்கள் அவனுக்கு மருந்து கொடுத்து அவனை காப்பாற்றினார். இதனால் இக்கிராமத்திலுள்ள அனைவரும் கிறிஸ்தவ மத்த்தை தழுவினர். தூய பவுலின் ஆலயம் ஜெர்மன் பாணி கலந்து கட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மெய்ஞானபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது