அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balurbalaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அசோகர் மீண்டும் யோசித்தார். இப்படித்தான் என்னை வரலாறு நினைவில் வைத்திருக்குமா? எல்லோரும் என்
வரிசை 55:
 
*''கலிங்க நாடு'' என்பது தற்போதுள்ள [[ஒரிஸா]], ''மகத நாடு'' தற்போதைய [[பீகார்]]. கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்துசாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர். இக்கொடிய போர்க்களக்காட்சியைக் கண்டு அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தைத் தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.
அசோகர் மீண்டும் யோசித்தார். இப்படித்தான் என்னை வரலாறு நினைவில் வைத்திருக்குமா? எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சி ஓடுவதுதான் என் சாதனையா? முதலில் என்னைப் பரிகசித்தார்கள். இப்போது அஞ்சுகிறார்கள். ஒருவகையில் இப்போதும் என்னை அவர்கள் வெறுக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா? ரத்த நிறத்தில் மாறிப்போன தன் வாளைப் பார்த்தார். அதில் அவர் முகம் தெரிந்தது. இதுவா கம்பீரம்?
 
என்னை வெறுப்பவர்களை நானும் வெறுப்பது சுலபம். என்னைப் போல் இல்லாதவர்களைப் பரிகசிப்பது எளிது. ஒரே ஒரு வாள் இருந்தால் போதும், எல்லோரையும் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம். அதிகாரம் இருந்தால் போதும், ஒரு நாட்டையே அடக்கி ஒடுக்கிவிடலாம். ஆனால், இதுதான் என் சாதனையா? இதுதான் நானா?
 
நிச்சயம் இல்லை. வெறுப்பவர்களை அழிப்பதைவிட, வெறுப்பை அழிப்பது கடினம் என்பது அசோகருக்குப் புரிந்தது. எல்லோரையும் பயப்படவைப்பது எளிது, நேசிக்கவைப்பது கடினம். போரிடுவது சுலபம், சமாதானத்தை ஏற்படுத்துவதுதான் சவாலானது. அசோகர் சில முடிவுகளை எடுத்தார். இனி அன்பே என் மதம். அதைக்கொண்டே என் எதிரிகளோடு நான் போரிடப்போகிறேன். என்னைப் பரிகசித்தவர்களை, என்னை வெறுத்தவர்களை, என்னைக் கண்டு அஞ்சியவர்களை அன்பால் வென்றெடுக்கப் போ<DP>கிறேன்.
 
என் வாளை மட்டுமல்ல; என் கருத்தையும் யார் மீதும் செலுத்த மாட்டேன். என் நாடு இனி பலவீனமானவர்களை அரவணைத்துக்கொள்ளும். என்னோடு முரண்படுபவர்கள் வரவேற்கப்படுவார்கள். ஆதரவற்ற மனிதர்கள் மட்டுமல்ல; வாய் பேச முடியாத விலங்குகளும் என் நாட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இனி எதிரிகள் என்று யாரும் இல்லை எனக்கு. எனவே, இனி இந்த வாள் எனக்குத் தேவைப்படாது!
 
அசோகர் வீசியெறிந்த அந்த வாள் பெரும் சத்தத்துடன் ஓர் ஓரத்தில் போய் விழுந்தது. அதற்குப் பிறகு யாருக்கும் அது தேவைப்படவில்லை.
( THE HINDU DT JULY 5,2017)
 
* இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார். ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது