தாருல் உலூம் தேவ்பந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மதராஸா
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தாருல் உலூம் தேவ்பந்த்'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:50, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

தாருல் உலூம் தேவ்பந்த் (Darul Uloom Deoband) என்பது இந்தியாவில் இசுலாமிய தியோபந்தி கருத்துகளைக் கொண்ட கல்லூரி ஆகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள தேவபந்து நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1866 இல் முகமது காசிம் நந்தோவி, ரசீத் அகமது காங்கோஹி, மற்றும் ஆபித் ஹுசைன் ஆகிய உலமாக்களால் ஆரம்பிக்கப்பட்டது.

பாடத் திட்டம்

இக்கல்லூரியில் அரபி, இந்தி, உருது, பாரசீக மொழி ஆகிய மொழிகளும் இசுலாமிய தத்துவங்களும், முகம்மது நபியின் போதனைகளான ஹதீஸ்களும் கற்பிக்கப்படுகிறது.[1]

பத்வா

பல்வேறு பிரச்சனைகளுக்கு இசுலாமிய அடிப்படையிலான தீர்ப்புகள் எனப்படும் பத்வா இங்கு கூறப்படுகிறது. இந்த பத்வா காஜி எனப்படும் இசுலாமிய சட்ட மேதைகளால் கூறப்படுகிறது. இங்கு பத்வா கூற பெண்களும் பயிற்றுவிக்கப்படுகின்றனர்..[2]

மேற்கோள்கள்

  1. " Qawaide Dakhilah." Darululoom-deoband.com.
  2. "Darul-Uloom Deoband backs appointment of women Qazis" THE HINDU. Accessed FEBRUARY 11, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாருல்_உலூம்_தேவ்பந்த்&oldid=2364823" இலிருந்து மீள்விக்கப்பட்டது