"கால்சியம் ஆக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,531 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== தயாரிப்பு ==
[[File:09. Гасење вар како силно егзотермент процес.webm|thumb|left|280px| சுட்ட சுண்ணாம்பினை நீரில் சேர்த்து நீற்றுப் போகச் செய்யும் வெப்ப உமிழ் வினையின் செயல்முறையின் விளக்கம்- சுட்ட சுண்ணாம்பின் துண்டுகளின் மீது நீரானது சொட்டு சொட்டாக விடப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு சுண்ணாம்பின் நீர்த்தல் வினை வெப்ப உமிழ் வினையாக நிகழ்கிறது. வினையின் வெப்பநிலை 300{{nbsp}}°С வரை உயரலாம்.<br>திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள் - மெரினா இசுடோசானேவ்சுகா, மிகா புக்லேசுகி மற்றும் விளாடிமிர் பெட்ருசேவ்சுகி - வேதியியல் துறை, FNSM, [[இசுகோப்சே பல்கலைக்கழகம்| சிரில் மற்றும் மெதோடியசு பல்கலைக்கழகம்]], இசுகோப்சே, மாசிடோனியா]]
வழக்கமாக, கால்சியம் ஆக்சைடானது [[கால்சியம் கார்பனேட்|கால்சியம் கார்பனேட்டைக்]] கொண்டுள்ள சுண்ணாம்புக்கல், கிளிஞ்சல் ஓடுகள் போன்ற பொருட்களை சுண்ணாம்புச் சூளையிலிட்டு வெப்பச்சிதைவிற்கு உட்படுத்துவதால் தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது {{Convert|825|C|F}} என்ற வெப்பநிலைக்கு மேல்<ref name="merck">Merck Index of Chemicals and Drugs, 9th edition monograph 1650</ref> வெப்பப்படுத்தும் போது நிறைவடைகிறது. இந்தச் செயல்முறையானது '''சுண்ணமாக்குதல் செயல்முறை''' என அழைக்கப்படுகிறது. இந்த வினையில் கால்சியம் கார்பனேட்டில் உள்ள [[கார்பனீராக்சைடு]] (CO<sub>2</sub>),வாயுவை வெளியேற்றி சுட்ட சுண்ணாம்பை விட்டுச் செல்கிறது.
: CaCO<sub>3</sub>(திண்மம்) → CaO(திண்மம்) + CO<sub>2</sub>(வாயு)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2368776" இருந்து மீள்விக்கப்பட்டது