வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 45:
==வளர்சிதை மாற்றக்குறைபாட்டு நோய்கள்==
===நீரிழிவு நோய்===
ஆரோக்கியமான உடல்நலம் கொண்ட மனிதனின் குருதியில் சர்க்கரை அளவு, உணவுக்கு முன்பு 80 - 120 மி.கி. /டெசி.லி. என்னும் அளவில் காணப்படும். உணவுக்குப் பின்பு அதிக அளவிலான இரத்தச் சர்க்கரை (Glucose) குருதியில் அதிகரிக்கும் போது இவை கரையாத கிளைகோஜனாக மாற்றப்படும். பிறகு, அது பிற்காலத் தேவைக்காக, கல்லீரல் மற்றும் தசை ஆகியவற்றில் சேமிக்கப்படும். தேவை ஏற்படும் போது அக் கிளைகோஜன் மீண்டும் இரத்தச் சர்க்கரையாக மாற்றப்பட்டு குருதியில் சேர்க்கப்படும். இச்செயற்பாடுகள் அனைத்தும் கணையத்தில் லாங்கர்கான் திட்டுகளில் உள்ள பீட்டா, ஆல்பா செல்களால் சுரக்கப்படும் இன்சுலின், குளூக்கோகான் ஆகிய வளரூக்கிகளால் (Hormones) கட்டுப்படுத்தப்படுகின்றது. இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபோது, குருதியில் காணப்படும் அதிகப்படியான சர்க்கரை பயன்படுத்தப்படாது கழிவுநீக்கச் செயற்பாட்டில் சிறுநீருடன் கலந்து வெளியேற்றப்படும். இந்நோய்க்கு நீரிழிவு (Diabetes Mellitus) என்றழைக்கப்படுகிறது. இதேபோல், இதய நோய்கள், சிறுநீரகச் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், அல்சீமியர் நோய், மூளையைப் பாதிக்கும் பக்கவாத நோய்கள் முதலானவை வளர்சிதைமாற்றச் செயல்பாட்டுக் குறைவினால் உண்டாகும் நோய்களாகும்.<ref name="Science Book">அறிவியல் பத்தாம் வகுப்பு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6, 2017, பக். 19-20</ref>
 
===மரபியல் நோய்கள்===
குறைபாடுள்ள அல்லது திடீர் மாற்றமடைந்த மரபணுவால் (Gene) மரபியல் நோய்கள் ஏற்படுகின்றன. வெள்ளுடல் நோய் (Albinism) எனப்படுவது மெலனின் வளர்சிதைமாற்றக் குறைபாட்டால் தோன்றும் மரபியல் நோய் ஆகும். தோல், உரோமம், விழிகளில் மெலனின் நிறமியின்மை காரணமாக இந்நோய் உருவாகின்றது. மேலும், இது திடீர் மாற்றமடைந்த ஒடுங்கு மரபணுக்களால் தோன்றுவதாகும். இதன் அறிகுறியாக, தோலின் நிறமானது வெளிறிப்போய் வெள்ளுடலாகக் காணப்படும். மேலும், சூரிய ஒளிமீது அதிக உணர்வு கொண்டதால் உண்டாகும் ஒளிக் காழ்ப்புநிலை (Photophobia), இரத்தம் உறையாமை நோய் (Hemophilia), கதிர் அரிவாள் இரத்தச்சோகை (Sickle cell Anaemia), இரத்த அழிவுச்சோகை (Thalassemia), உளமுடக்கப் பிணிக்கூட்டு நோய் (Down Syndrome), நிறக் குருடு, குமிழ்ச் சிறுவன் நோய் முதலியன மரபியல் நோய்கள் ஆகும்.<ref>அறிவியல் பத்தாம்name="Science வகுப்பு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6, 2017, பக். 19-20</refBook">
 
===சத்துப் பற்றாக்குறை நோய்கள்===
ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, மனித உடலுக்கு அவசியப்படும் எல்லா உணவுப் பொருள்களும் உரிய விகிதத்தில் தகுந்த அளவில் இருப்பது இன்றியமையாதது ஆகும். சரிவிகித உணவை உட்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாத நிலையில் பல்வேறு சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்குப் புரதச்சத்துக் குறைபாட்டால் உடல் மெலிவு நோய் (Marasmus), குவாஷியார்கர் எனப்படும் சவலை நோய் ஆகிய நோய்கள் தோன்றிக் காணப்படுகின்றன. குழந்தையின் எடைக்குறைவு, கடும் வயிற்றுப்போக்கு, எலும்பு மீது தோல் போர்த்திய உடலமைவு ஆகியவை உடல் மெலிவு நோயின் அறிகுறிகள் ஆகும். சவலை நோய்க்கு ஆட்பட்ட குழந்தைகள் உப்பிய வயிற்றுடனும் வீங்கிய முகம், கால்களுடனும் காட்சியளிப்பர்.<ref>அறிவியல் பத்தாம்name="Science வகுப்பு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6, 2017, ப. 20</refBook">
 
==விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றப் பாதிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது