"குரோனசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

183 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''குரோனசு''' என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் பன்னிரு டைட்டன்களுள் ஒருவரும் டைட்டன் தலைவரும் ஆவார். இவருக்கு இணையான ரோமக் கடவுள் சற்றேன் ஆவார். இவர் தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு குரோனசின் மகன் சியுசு அவரை வீழ்த்தி பாதாள உலகமான டார்டரசில் சிறை வைத்தார்.
 
==குரோனசின் எழுச்சி==
யுரேனசு மற்றும் கையாவிற்கு நூறு கைகள் கொண்ட எகாடோஞ்சிர்கள் மற்றும், ஒற்றைக் கண் கொண்ட சைக்ளோப்சுகள் மற்றும் கைகான்ட்சுகள் என்னும் அரக்கர்கள் ஆகிய வலிமை மிகுந்த அரக்கப் பிள்ளைகள் பிறந்தனர். இதனால் பயந்த யுரேனசு அவர்களைப் பாதாள உலகமான டார்டரசில் அடைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதனால் யுரேனசு மீது கோபம் கொண்ட கையா கல்லால் ஒரு அரிவாள் செய்து யுரேனசை வீழ்த்துமாறு கூறி தன் டைட்டன் பிள்ளைகளிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பயந்தனர். பிறகு குரோனசு முன்வந்து அந்த அரிவாளை எடுத்தார். யுரேனசு கையாவுடன் உறவாட முயன்றபோது அவரின் பிறப்புறுப்பை வெட்டிய குரோனசு அதை கடலில் வீசியெறிந்தார். அப்போது அந்த கடலில் இருந்து அப்ரடைட்டி பிறந்ததாகக் கூறப்படுகிறது.
 
பிறகு தன் சகோதரர்களான எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகளை விடுவித்தார் குரோனசு. ஆனால் அவர்களைின் வலிமையைக் கண்டு பயந்த குரோனசு மீண்டும் அவர்களை பாதாளத்தில் அடைத்தார். மேலும் அவர்களைக் காவல் காக்க கேம்பே என்னும் டிராகனை உருவாக்கினார். குரோனசின் ஆட்சி பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அவரது ஆட்சியில் அனைவரும் நன்மைகளையே செய்து வந்தனர்.
 
==குரோனசின் வீழ்ச்சி==
தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த குரோனசு அதேபோன்று தனக்கும் நேரும் என்று தன் பெற்றோர் மூலம் அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, இசுடியா, டிமிடர், பொசைடன் மற்றும் ஏடிசு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சியுசை ரேயா காப்பாற்ற நினைத்தார். அதற்காக கையா ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி ரேயா ஒரு கல்லில் துணியைச் சுற்றி குழந்தை என்று கூறி குரோனசை ஏமாற்றிவிடுகிறார். பிறகு க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் சியுசை மறைத்து வைத்துவிட்டுச் சென்றார் ரேயா. அதன் பிறகு சியுசை கயா வளர்த்ததாகக் கூறப்படுகிறது.
 
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2369962" இருந்து மீள்விக்கப்பட்டது