அமதெரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
 
==அமதெரசு மற்றும் சுசானவோ==
சுசானவோ தன் புயல் வலிமையால் விண்ணுலகை தாக்கிக் கொண்டிருந்தான். இதனால் இசநாகி சுசானவோவை விண்ணுலகை விட்டு செல்லுமாறு கட்டளையிட்டார். சுசானவோ இறுதியாக அமதெரசுவை சந்தித்து விடைபெற்றுச் செல்ல நினைத்தான். ஆனால் அமதெரசு அவரை நம்பவில்லை. இதனால் சுசானவோ தன்னை நிரூபிக்க்க ஒரு சவால் விடுத்தான். அந்த சவாலின் படி பொருட்களில் இருந்து கடவுள்களை உருவாக்க வேண்டும். சுசானவோவின் வாளின் மூலம் அமதெரசு மூன்று பெண் கடவுள்களை உருவாக்கினார். சுசானவோ அமதெரசுவின் அணிகலன் மூலம் ஐந்து ஆண் கடவுள்களை உருவாக்கினார், பிறகு அமதெரசு ஆண் கடவுள்கள் தன் அணிகலனில் இருந்து பிறந்த்தால் தனக்கே உரிமையானது என்றார். இதனால் இருவருக்கும் சண்டை நடந்தது. முடிவில் அமதெரசு கோபத்துடன் ''அம-னோ-இவாடோ'' என்ற குகையில் மறைந்து கொண்டார். இதனால் உலகம் இருண்டது. இதற்கு தண்டனையாக சுசானவோ விண்ணகத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார்.
உலகில் இருள் சூழ்ந்து உயிரினஙக்ள் அனைத்தும் துன்ப்ப்பட்டன. அமதெரசுவை திரும்பக் கொண்டு வர அனைத்து கடவுள்களும் திட்டம் தீட்டினர். .அதற்காக ஒரு மரத்தில் ''யாடா-நோ-ககாமி'' என்னும் கண்ணாடியையும் ''யசகானி நோ மகடமா'' என்னும் முத்து நகையையும் குகையின் வாயிலுக்கு நேர் எதிராக கட்டி வைத்தனர். பிறகு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அந்த சத்தங்களைக் கேட்ட அமதெரசு காரணத்தை அறிய சிறிய துளை வழியாக வெளியே நோக்கினார். அப்போது சில கடவுள்கள் தங்களுக்கு வேறு ஒரு புதிய கதிரவ கடவுள் கிடைத்துவிட்டதாக கூறி மகிழ்ந்து கொண்டாடினர். இதைக்கேட்டு கோபமடைந்த அமதெரசு குகையின் வாயிலை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார். அப்போது அவர் தன் முன்னே கட்டப்பட்டிருந்த கண்ணாடியில் தன் பேரொளி வீசும் முகத்தை பார்த்தார். அதனால் அவரது ஒளி பிரதிபலிப்படைந்து இருண்ட பூமியில் பட்டது. இதனால் பூமி பழைய நிலைக்கு திரும்பியது. பயிர்கள் செழித்தன, உயிரினங்கள் வாழ்வு பெற்றன. பிறகு வலிமையின் கடவுள் ''அமெ-னோ-தசிகராவோ'' தன் பலத்தால் குகையை நிரந்தரமாக மூடிவிட்டார். பிறகு அமதெரசு மீண்டும் விண்ணுலகம் சென்று தன் பணியைத் தொடர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அமதெரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது