சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Added content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
கிராமங்களில் காவல் தெய்வங்களாகக் கருதப்படும் சுடலை மாடன், [[இசக்கி மாடன்]], [[புலமாடன்]], [[வேம்பன்]], [[கறுப்புசாமி|கருப்பசாமி]], [[மாடசாமி]], [[மாயாண்டி]], [[முனியாண்டி]]போன்ற ஆண் தெய்வங்களும், [[முப்பிடாரி]], [[வண்டிமரிச்சி]], [[காட்டேரி]], [[உச்சிமாகாளி]], [[இருளாயி]], [[முனியம்மாள்]], [[இசக்கி அம்மன்|இசக்கியம்மன்]] போன்ற பெண் தெய்வங்களும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளில் வணங்கப்பட்டு வருகிறது.
 
இத்தெய்வங்களின் கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது. இக்கோவில்களில் சிலைகள் இருக்கும் தனி அறையான கருவறை என்கிற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இல்லை. சாமியின் சிலையைத் தொட்டு வணங்கலாம். இத்தெய்வங்கள் பெரும்பாலும் மணல், சுண்ணாம்பு கலந்து திண்டுகளாக முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டிருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட திண்டுகளில் சாமிகளின் முகம் மட்டும் வரையப்பட்டிருக்கும் அல்லது காவிநிறக் கோடுகள் நீளவாக்கில் போடப்பட்டிருக்கும். சில ஊர்களில் கற்சிலைகளாகவும், சில ஊர்களில் சிலைகள் களி மண்ணாலோ சுண்ணாம்பாலோ உருவங்களாக உருவாக்கப்பட்டு வண்ணம் பூசி இருக்கும், கற்சிலைகளுக்கு வண்ணம் பூசப்படுவதில்லை. பிற இந்து தெய்வங்களைப் போல் கருணை வடிவான முகங்களாக இத்தெய்வங்களின் முகங்கள் அமைக்கப்படுவதில்லை.
 
ஆண்டுக்கொரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ இத்தெய்வங்களுக்கு சிறப்பு விழா 'கொடை விழா' என்கிற பெயரில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் ஆடு, பன்றி மற்றும் சேவல்களைப் பலியிட்டு அசைவ உணவு படைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தெய்வங்களுக்கு மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
வரிசை 56:
இக்கோயில்களின் கொடை விழாக்களின் பொழுது ஒரு சில பக்தர்கள் சாமியாடும் வழக்கம் இருக்கிறது. சாமியாடிகள் என்றழைக்கப் படும் அவர்கள் ஒரு சில குடும்பங்களிலிருந்தே பரம்பரையாகத் தேர்வு செய்யப்படும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இவர்கள் ஆவேசத்துடன் ஆட்டமிட்டுக் குறி சொல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சிலர் தங்களது குறைகளையோ அல்லது பொதுவான குறைகளைத் தெரிவித்து அதைத் தீர்க்க வழி கோருகின்றனர். சாமியாடுபவர்களும் அதற்கு பதில் அளிக்கின்றனர். இப்பதிலை தெய்வமே தெரிவித்ததாக நினைத்து அதன்படி நடக்கும் வழக்கம் கிராமப்பகுதிகளில் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இக்கோவில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.வருகின்றனர
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுடலை_மாடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது