எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
==வாழ்க்கை சுழற்சி==
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சியின் தலைமுறைகளின்   எண்ணிக்கை வெப்பநிலை [7] - பூமத்திய ரேகையைச் சார்ந்து, ஒன்பது தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மிதமான வெப்பநிலையில் சீனாவில்  ஐந்து தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வகத்தின் சிறந்த சூழலில், ஒரு தலைமுறை 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தலைமுறை எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி வயதில் முதிர்ச்சியடைவதற்கு சராசரி நேரம் 26 முதல் 59 நாட்கள் வரை ஆகும். குளிர் கால வெப்ப நிலைகளில், எலுமிச்சை பட்டாம்பூச்சி தன் கூட்டுப்புழு பருவத்தினைபருவத்தினைக் கழிக்கிறது. பொதுவாக, இந்த பட்டாம்பூச்சி புழு பருவத்தில் ஐந்து இடைஉயிரிகளைக் கடக்கிறது. பெண் பட்டாம்பூச்சி செடிக்கு செடி சென்று இலையை தன் கால்களால் பிடித்துக்கொண்டு இலையின் மேற்புறத்தில்  ஒரு முட்டையை இடும். முட்டையை இட்ட உடன் அங்கிருந்து சென்று விடும். முட்டை வட்டமாக இளம்மஞ்சள் நிறத்தில், அடிப்பகுதி தட்டையாகவும், மென்மையான மேற்பரப்பு கொண்டதாகவும் மற்றும்  சுமார் 1.5 மிமீ உயரம் கொண்டதாகவும் இருக்கும். வளமான இனப்பெருக்கத்திறமுடைய முட்டைகள் நுனியில் சிறு சிவப்பு குறியினை வளர்த்துக்கொள்ளும்.
 
புதிதாக வெளிவந்த புழு மேற்புறத்தில் உள்ள இலையின் நடுவில் செல்லும். முதல் இடைஉயிரி கருப்பு நிறமாகவும், கருப்பு தலைகள் மற்றும் இரண்டு வரிசை துணை முதுகு தசைப்பற்றுள்ள முள்ளந்தண்டுக்களும் கொண்டது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடைஉயிரி பளபளப்பான, இருண்ட-பழுப்பு தலை மற்றும் 8 வது மற்றும் 9 வது பிரிவுகளில் வெள்ளை நிற குறியீடுகளை கொண்ட இந்த கம்பளிப்புழு பறவையின் எச்சத்தின் மீது வெள்ளையாக ஒட்டு போட்டது போல் காணப்படும். பறவையின் எச்சம் போல் இருப்பதால் திறந்த வெளிகளில் இருக்கும் பொது எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.
வரிசை 15:
 
இந்த பட்டாம்பூச்சி ஒரு மண்ணை புழுதியாக செழிப்பான செய்யும் தன்மை உடையதாகவும், மலர்களை நோக்கி செல்வதில் ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கிறது. அதிவேக பறக்கும் தன்மையை எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான பட்டாம்பூச்சி ஆகும், ஏனெனில் இதற்கு பலவிதமான பறக்கும் தன்மைகள் உள்ளன. இளங்காலையில் பறக்கும் தன்மை மிகவும் மெதுவாகவும், நேரம் செல்ல செல்ல வேகமாகவும் நேராகவும், கீழ்நோக்கியும் பறக்கும். அதிகமான வெயில் நேரத்தில் ஈரமான இடத்தில் அசைவற்று அமர்ந்திருக்கும்.
 
==பொருளாதார முக்கியத்துவம் [தொகு]==
இந்தியா, பாக்கிஸ்தான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் பல பயிரிடப்பட்ட சிட்ரஸ் வகைகளில் எலுமிச்சை பட்டாம்பூச்சி ஒரு பொருளாதார சேதத்தை விளைவிக்கும் பூச்சியாகும். கம்பளிப்பூச்சிகள் முற்றிலும் இளம் சிட்ரஸ் மரங்கள் (2 அடி கீழே) மற்றும் சிட்ரஸ் நாற்றங்கால் முழுவதையும் அழிக்க வல்லது.முதிர்ந்த மரங்களில், கம்பளிப்பூச்சிகள் இளம் இலைகளையே உண்கிறது.
 
<gallery>
Fourth instar larva.jpg
"https://ta.wikipedia.org/wiki/எலுமிச்சை_அழகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது