கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
கணினித் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மனித வாழ்வின் சகல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று, வடிவமைப்பு மற்றும் அதனோடிணைந்த படவரைதற் துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை, [[வரைபலகை|வரைபலகைகளைப்]] பயன்படுத்திக் கைகளால் படங்களை வரைந்த நிலைக்கு மாற்றாக கணினிகளைப் பயன்படுத்திப் படம் வரையும் முறை அறிமுகமானது. இத் துறையில் கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகப் பல துறைகளில் இது ஒரு இன்றியமையாத அம்சமாக ஆகியுள்ளது.
 
[[படிமம்:Cadproc1-ta.png|right|400px]]
[[ராக்கெட்]] மற்றும் [[வானூர்தி]]கள் வடிவமைப்பு, [[உற்பத்தி]] முதலிய உயர் தொழில்நுட்பத் துறைகள் தொடக்கம், மிகச்சிறிய அன்றாடம் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழிற் துறைகள் வரை ''கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல்'' முறைமையைப் பயன்படுத்தி வருகின்றன. கட்டிடங்களையும் பிற கட்டுமான அமைப்புக்களையும் வடிவமைத்துக்கட்டுதல், இயந்திர சாதனங்களின் உற்பத்தி நுட்பத்துறைகளில் பயன்படுவது ஒருபுறமிருக்க, [[திரப்படம்|திரைப்படத்]] தயாரிப்பு, [[விளம்பரம்|விளம்பரத்துறை]] போன்றவற்றில் [[கலை]] சார்ந்த தேவைகளுக்கும் இது பெரிதும் உதவுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கணினி_உதவு_வடிவமைப்பும்_வரைதலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது