சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
grammer corrections
வரிசை 66:
ஆண்டுக்கொரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ இத்தெய்வங்களுக்கு சிறப்பு விழா 'கொடை விழா' என்கிற பெயரில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் ஆடு, பன்றி மற்றும் சேவல்களைப் பலியிட்டு அசைவ உணவு படைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தெய்வங்களுக்கு மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
 
[[File:Foods served for SudalaiMadan.jpg|thumb|தோவாளை காஞ்சிப்பறைகஞ்சிப்பறை சுடலைமாடனுக்கு படைக்கப்பட்டிருக்கும் அசைவ படையல்]]
 
இக்கோயில்களின் கொடை விழாக்களின் பொழுது ஒரு சில பக்தர்கள் சாமியாடும் வழக்கம் இருக்கிறது. சாமியாடிகள் அல்லது சாமிகொண்டாடிகள் என்றழைக்கப்படும் அவர்கள் ஒரு சில குடும்பங்களிலிருந்தே பரம்பரையாகத் தேர்வு செய்யப்படும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இவர்கள் ஆவேசத்துடன் ஆட்டமிட்டுக் குறி சொல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சிலர் தங்களது குறைகளையோ அல்லது பொதுவான குறைகளைத் தெரிவித்து அதைத் தீர்க்க வழி கோருகின்றனர். சாமியாடுபவர்களும் அதற்கு பதில் அளிக்கின்றனர். இப்பதிலை தெய்வமே தெரிவித்ததாக நினைத்து அதன்படி நடக்கும் வழக்கம் கிராமப்பகுதிகளில் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/சுடலை_மாடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது