இந்திய கடற்கரைச் சமவெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இந்திய கடற்கரைச் சமவெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
# மத்தியில் உள்ள கனரா பகுதி
# தெற்கில் உள்ள கேரளா பகுதி
கேரளா பகுதியில் கடற்கரை ஓரமாக பல உப்பங்கழிகள் உள்ளன. அவற்றைக் காயல்கள் என்றும் கூறுவர். அவை உள்நாட்டுப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. உப்பங்கழிகளை ஒட்டி மணல்மேடகள் காணப்படுகின்றன. மிகுந்த வெப்பநிலை உயாந்த ஈரப்பதம் இருப்பதால் உருமாறிய பாறைகள் தீவிரமாக வானிலை சிதைவடைகின்றது. இதன் விளைவாக மிகுந்த மணல் காணப்படுகின்றது.
 
கொங்கன் கடற்கரைப் பகுதி உடைபடாத உறுதியான நீண்ட குறுகிய கடற்கரை பகுதியாக உள்ளது. வடக்கில் நருமதை, தபதி, மாஹி, சபர்மதி போன்ற ஆறுகள் காம்பிய வளைகுடாவில் பொருள்களைப் படிவிக்கின்றன. அதனால் காம்பே வளைகுடாவின் ஆழம் குறைந்து சதுப்பு நிலங்கள் தோன்றியுள்ளன. பல இடங்களில் அகன்ற வண்டல் சமவெளிகள் வெளிப்பட்டுள்ளன. மலைச் சாிவிலிருந்து மிகுந்த வேகத்துடன் வரும் ஆறுகள் வண்டல் விசிறிகளை உருவாக்கியுள்ளன. தென்மேற்குப் பருவக்காற்று கடல் அலைகள் மிகுந்த மணலை கரைஒரங்களில் படிவடையச் செய்துள்ளது. எனினும் வண்டல் படிவுகள் தொடர்ச்சியாக இல்லை ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கிளைக் குன்றுகள் பல இடங்களில் கடற்கரை வரை நீண்டு அமைந்துள்ளது.
 
== கிழக்குக் கடற்கரை சமவெளி ==
 
இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விாிகுடா கடலுக்கும் இடையே அமைந்துள்ளது. இச் சமவெளி மேற்குக் கடற்கரை சமவெளியை விட அகலமானது. இப்பகுதியில் பாயும் ஆறுகள் பெரும் அளவில் வண்டலைப் படிவிப்பதால் இப்பகுதி வளமான பகுதியாகும். ஆறுகளின் முக துவாரத்தில் டெல்டாக்கள் உள்ளன. இதன் விளைவாக கப்பல்கள் கரையை நெருங்க முடிவதில்லை. தெற்கே செல்லச் செல்ல சமவெளியின் அகலம் அதிகமாகிறது. கிழக்குக் கடற்கரை சமவெளியினை மூன்று பகுதிகளாகப் பிாிக்கலாம்.
 
# தமிழ்நாடு கடற்கரைச் சமவெளி
# ஆந்திரக் கடற்கரைச் சமவெளி
# உத்கல் கடற்கரைச் சமவெளி
 
== தமிழ்நாடு கடற்கரை சமவெளி ==
 
இதனை சோழ மண்டலக் கடற்கரை என்றும் கூறுவர் இது அகன்றுள்ளது. அகலம் சுமார் 100 கி.மீ. வண்டல் படிவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. படிகப் பாறைகளால் ஆன சிறு குன்றுகள் உள்நாட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கு காவிாி டெல்டா அமைந்துள்ளது.
 
== ஆந்திரக் கடற்கரை சமவெளி ==
 
இங்கு கிருஷ்ணா, கோதாவாி டெல்டாக்கள் உள்ளன.
== உத்கல் கடறகரைச் சமவெளி ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_கடற்கரைச்_சமவெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது