ஊடகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
வரிசை 1:
{{AEC|[[User:Thiyagu Ganesh|தியாகு கணேஷ்]]|சூலை 04, 2017}}
'''ஊடகவியல்''' (Journalism) அல்லது '''இதழியல்''' என்பது, மக்களிடம் செய்திகள், நிகழ்வுகளை கொண்டு செல்லும் ஊடகங்கள். அவை, [[செய்தித்தாள்]]கள், [[சஞ்சிகை]]கள், [[வானொலி]], [[தொலைக்காட்சி]] போன்ற் ஊடகங்கள் அடங்கும். மேலும், இதழியல் என்பது [[செய்தி]]களை அல்லது [[செய்திக் கட்டுரை]]களை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பணி ஆகும். முன்னர் இத்துறை அச்சு ஊடகங்களான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே செய்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மின்னணு ஊடகங்களையும் இது தனக்குள் உள்ளடக்கியது. [[எழுத்தாளர்]] அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள [[நிகழ்வு]]களையும், எண்ணங்களையும், பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையாக [[தகவல்]]களை வெளியிட வேண்டும் என்பதே ஊடக நெறியாக இருக்க வேண்டும், என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதனால் ஊள்ளூர், மாநில, தேசிய என அனைத்து தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்துக் கொள்ள மு முடிகிறது. ஊடகவியல்; [[அரசு]], [[பொதுத்துறை]] அலுவலர்கள், நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், [[தொண்டு நிறுவனம்|தொண்டு நிறுவனங்கள்]], ஊடகவியல் நிறுவனங்கள், சமூக அதிகாரங்களைக் கொண்டிருப்போர் போன்றோரின் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதுடன்; நடப்பு நிகழ்வுகள் குறித்த தமது கருத்துக்களையும் வெளியிடுவதுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/ஊடகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது