வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வீரமாமுனிவாின் மருத்துவநூல்கள்.
வரிசை 1:
== வீரமாமுனிவாின் மருத்துவநூல்கள். ==
{{Infobox Person
=== அறிமுகம் ===
| name = வீரமாமுனிவர்
இத்தாலி நாட்டில் பிறந்தவா். தமிழ் மருத்துவத்தை கற்று அதன் பயனை உணா்ந்தவா். சித்தா்கள் வழியில் பாடலாக உருவாக்கியுள்ளாா்.
| image =
வீரமாமுனிவாின் மருத்துவநூல்கள்.
| image_size = 0px
நசகாண்டம்
| caption = [[மதுரை|மதுரையில்]] வீரமாமுனிவரின் தோற்றம்.
நவரத்தின சுருக்க மாலை
| birth_name = கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி
மகா வீாிய சிந்தாமணி
| birth_date = [[நவம்பர் 8]], [[1680]]
வைதிய சிந்தாமணி
| birth_place = [[கேசுதிகிலியோன்]], [[இத்தாலி]]
சுரமஞ்சாி
| death_date = [[பெப்ரவரி 4]], [[1742]]
பூவரசங்காய் எண்ணெய்
| death_place =
மேகநாதத்தைலம் கலிவெண்பா
| death_cause =
பஞ்சாட்சர மூலி எண்ணெய்(ஆனந்தகளிப்பு)
| resting_place =
சத்துருசங்கார எண்ணெய்(நொண்டிச் சிந்து)
| resting_place_coordinates =
வீரமெழுகு
| residence =
முப்புசூத்திரம்(நொண்டிச் சிந்து)
| nationality =
அனுபோகவைத்திய சிகாமணி
| other_names = தைரியநாதன்
வீாிய சிந்தாமணி இரண்டாம் பாகம்
| known_for =
குணவாடகம்
| title =
நிலக்கண்ணடாடி முதலிய நூல்கள் ஆகும்.
| religion = [[கத்தோலிக்க திருச்சபை]]
இந்நூல்கள் மருத்துவ துறையினருக்கு பொிதும் உதவும்.
| partner =
==== மேற்கோள் ====
| parents =
பதிப்பாசிாியா்-திருமதி,கண்ணகி கலைவேந்தன், தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்,2005, பக் 41, தமிழய்யா வெளியீட்டகம், திருவையாறு.
| footnotes =
பகுப்புகள்: [[இலக்கிய கட்டுரைகள்] ]] துாத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
}}
 
'''வீரமாமுனிவர்''' (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1742)<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', [[அமெரிக்க இலங்கை மிசன்]] அச்சியந்திரசாலை, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6</ref> [[இத்தாலி]] நாட்டிலுள்ள [[கேசுதிகிலியோன்]] என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - ''கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி'' (''Constantine Joseph Beschi''). இவர் [[இயேசு சபை]]யைச் சேர்ந்த குரு ஆவார். [[கிறிஸ்தவம்|கிறித்தவ மதத்தைப்]] பரப்பும் நோக்கில், [[1709]]ஆம் ஆண்டு [[இயேசு சபை|இயேசுசபைப்]] குருவானபின், [[1710]] ஆம் ஆண்டு [[தமிழகம்|தமிழகத்துக்கு]] வந்தார்.
 
இவர் [[தமிழ்]] மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், [[இயேசு கிறித்து|இயேசுக் கிறித்துவின்]] வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "[[தேம்பாவணி]]" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
 
[[திருக்குறள்]], [[தேவாரம்]], [[திருப்புகழ்]], [[நன்னூல்]], [[ஆத்திசூடி]] ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் <ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/34526.html | title=வீரமா முனிவர் சிறப்பு பகிர்வு | work=Vikatan | date=08 November 2014 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref>
 
==இந்தியாவில்==
இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம் பரப்பு பணி செய்ய [[கோவா (மாநிலம்)|கோவா]] வந்து சேர்ந்தார்.
 
===தமிழகத்தில்===
[[Image:Fr Beschi.JPG|thumb|கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்]]
சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; [[மதுரை|மதுரையில்]] காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
 
====அவரது தமிழக வாழ்க்கை முறை====
[[1822]] இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட ''வித்துவான் முத்துசாமி பிள்ளை'', இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
 
:''இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.''
 
====வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து====
 
முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.
 
வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை ''வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்'' என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் <ref>ச. இராசமாணிக்கம், சே.ச., ''வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்'', தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை, 1996; 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 24.</ref>. முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் ''தத்துவ போதகர்'' என்று சிறப்புப்பெயர் பெற்ற [[இராபர்ட் தெ நோபிலி]] என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606இல் [[மதுரை]] வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் ''தத்துவ போதகர்'' என்ற பெயர் இருந்தது.
 
வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:
 
:''வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள்.இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது...கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது'' <ref>மேற்குறிப்பு, பக். 46-47.</ref>
 
===பெயர்மாற்றம்===
மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை ''தைரியநாதசாமி'' என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் ''வீரமாமுனிவர்'' என மாற்றிக் கொண்டார்.
 
==தமிழ்ப் பணி==
{{See also|வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்}}
{{See also|வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள்}}
 
இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
 
இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
 
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் [[தமிழ் அகரமுதலி]] ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
 
[[சதுரகராதி|சதுரகராதியை]], [[நிகண்டு|நிகண்டுக்கு]] ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
 
அக்காலத்தில் சுவடிகளில் [[மெய்யெழுத்து]]களுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் [[குறில்]], [[நெடில்]] விளக்க என்று "ாாாா" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
 
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து [[உரைநடை]]யாக மாற்றியவர் இவர்.
 
===பிற தமிழ் படைப்புகள்===
 
*'''[[தொன்னூல் விளக்கம்]]'''என்ற நூலில் [[எழுத்து]], [[சொல்]], [[பொருள்]], [[யாப்பிலக்கணம்|யாப்பு]], அணி ஆகிய ஐந்து [[இலக்கணம்|இலக்கணங்களைத்]] தொகுத்தார்.
 
*'''[[கொடுந்தமிழ் இலக்கணம்]]''' என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் [[செய்யுள்|செய்யுளுமே]] ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு [[தமிழ் இலக்கணம்|இலக்கணம்]] அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும்.
 
*'''[[திருக்குறள்|திருக்குறளில்]]''' அறத்துப்பாலையும், பொருட்பாலையும் [[இலத்தீன்]] மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் '''வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை''' ஆகிய நூல்களைப் படைத்தவர்.
 
*'''திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை''' இவரது பிற நூல்கள்.
 
*1728-இல் புதுவையில் இவரின் "[[பரமார்த்த குருவின் கதை]]" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் [http://en.wikipedia.org/wiki/Jean_de_La_Fontaine Jean de la Fontaine] (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த [[நகைச்சுவை]] இலக்கியம் ஆகும்.
 
*காவியத்தில் [[தேம்பாவணி]] இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக [[யாப்பிலக்கணம்|யாப்பு]] வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
 
==வீரமாமுனிவரின் இறப்பு==
வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்:
{{blockquote|''1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் [[மணப்பாடு|மணப்பாட்டில்]] இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம்'' <ref>மேற்குறிப்பு, பக். 23.</ref>}}
 
வீரமா முனிவர் எழுதிய [[பரமார்த்த குருவின் கதை]]யை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் "வீரமா முனிவர் [[திருச்சி]]யில் [[சந்தா சாகிப்]] என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த [[காயல்பட்டினம்|காயல்பட்டினத்தில்]] வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்" எனக் குறிப்பிடுகிறார்.<ref name="JMR">{{cite book | url=http://books.google.com.au/books?id=F8o-AAAAYAAJ | title=Paramār̲atakuruvin̲ Katai | publisher=ஜே. எம். ரிச்சார்ட்சன் | author=பாபிங்டன், பெஞ்சமின் | year=1822 | location=லண்டன்}}</ref>
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
 
==மேலும் காண்க==
*[[வீரமாமுனிவரின் பெயர்கள்]]
*[[வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து]]
 
== வெளி இணைப்புகள்==
*[http://archives.aaraamthinai.com/6mthinaithoguppu/special/viramamunivar.asp ஆறாம்திணை இணைய இதழில்] வீரமாமுனிவர் கட்டுரை.
 
[[பகுப்பு:தமிழ் வளர்த்த பிற மொழியினர்]]
[[பகுப்பு:இத்தாலிய அறிஞர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவ போதகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:1680 பிறப்புகள்]]
[[பகுப்பு:1747 இறப்புகள்]]
[[பகுப்பு:இயேசு சபையினர்]]
[[பகுப்பு:தமிழ்-லத்தீன் மொழிபெயர்ப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது