இந்திய மண் வகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மண்ணின் வகைகள் இந்தியாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''மண்ணின் வகைகள்'''
 
இந்தியாவிலுள்ள மண் வகைகளை வண்டல மண், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் என்று நான்கு பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவற்றைத் தவிர காடுகளிலுள்ள மண், பாலைவன மண், உப்பு, காரமண், சதுப்புநில மண் ஆகியன குறிப்பிடத்தக்க முக்கியமான மண் வகைகளாகும். வண்டல் மண் வட இந்திய சமவெளிகளிலும், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் ஆகியன தீபகற்ப இந்தியாவிலும் காணப்படுகின்றன. தீபகற்ப இந்தியாவிலுள்ள மண் அவை அமைந்துள்ள இடங்களிலேயே தோன்றியுள்ளன. வட இந்திய சமவெளிகளில் காணப்படும் மண் பெரும்பாலும் கடத்தப்பட்ட மண்ணாகும்.
 
 
 
 
== '''வண்டல் மண்''' ==
 
 
இந்தியாவின் மண் வகைகளில் வண்டல் மண் மிகப் பெரும் பரப்பில் காணப்படுகின்றது. மக்கள் தொகை மிகுந்துள்ள 1.5 மில்லியன் ச.கி.மீ. பரப்பில் வண்டல் மண் காணப்படுகின்றது. வேளாண்மையைப் பொறுத்த மட்டிலும் வண்டல்மண் மிகச் சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆறுகளின் படிவுகளால் வண்டல்மண் ஏற்படுகிறது. வட இந்திய சமவெளியில் பெரும் பகுதியில் வண்டல் மண் பெரும்பாலும் காணப்படுகிறது. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஆறுகளில் டெல்டா பகுதிகளிலும், நர்மதை, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், குஜராத்தின் வடபகுதியிலும், சட்டீஸ்கர் சமவெளியிலும் வண்டல் மண் காணப்படுகிறது. களிமண் மணல் கலப்புமிக்க் மண்ணாக இருப்பதால் நிலத்தை உழுவது எளிதாக உள்ளது. இந்த மண் காணப்படும் பகுதிகளில் நீர் வசதி இருந்தால் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புவி அமைப்பியலின்படி வண்டல் மண்ணை இரு பிாிவுகளாகப் பிாிக்கலாம்.. வெள்ளச் சமவெளி, டெல்டா, தாழ் நிலங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும் புதிய வண்டல் மண்ணை "காதர்" என்று கூறுவர். வெள்ளநீர் அடைய முடியாத உயர்நிலப் பகுதிகளில் பழைய வண்டல் மண் காணப்படுகிறது. இதனை "பாங்கர்" என்று கூறுவர். பாங்கர் மண்ணின் கீழ் அடுக்குகளில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றது. பாங்கர் மண்ணை விட காதா மண்ணில் மணல் கலந்து அதிகமாக உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மண்_வகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது